தபால்  நிலையத்தில்  பருப்பு விற்பனை அறிமுகம் ......மத்திய அரசு  புதிய திட்டம் ...!!!

பண்டிகை  காலம்  நெருங்கி வருவதால், பருப்பு  மற்று இதர பொருட்களின்  விலை மள மளவென உயரும்  என எதிர் பார்க்கப்படுகிறது.    

இதனை  தொடர்ந்து, அனைத்து மக்களுக்கும்  சரியான  விலையில், பருப்பு  சென்று சேர வேண்டும் என்பதால்,  மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது  தொடர்பான கூட்டம் நேற்று,நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்றது.

இதனை  நடைமுறை படுத்தும் விதமாக, மாநிலங்களில் அரசு விற்பனை மையங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை என்பதால்,  தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசிடம் இருப்பில் உள்ள பருப்பு வகைகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.  

இதுபோல், கடலைப்பருப்பு விலையை கட்டுப்படுத்த, சில்லரை விற்பனைக்காக அரசு ஏஜென்சிகளுக்கு பண்டிகை தேவையை கருத்தில் கொண்டு தாராளமாக வழங்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது.  

அதாவது,  நாடு முழுவதும் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் ஊரக பகுதிகளில் உள்ளதால், மத்திய அரசின் இந்த  திட்டம்  அனைவருக்கும்  பயன்படும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.