pm Suraksha Bima Yojana :வங்கிக்கணக்கில் குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால், மத்திய அரசு சார்பில் கிடைக்கும் ரூ.4 லட்சம் மதிப்பிலான பலன்களை இழக்க நேரிடும்.
வங்கிக்கணக்கில் குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால், மத்திய அரசு சார்பில் கிடைக்கும் ரூ.4 லட்சம் மதிப்பிலான பலன்களை இழக்க நேரிடும்.
மத்திய அரசு சார்பில் இரண்டு விதமான காப்பீடுகளுக்கு ப்ரீமியம் தொகை செலுத்தும் காலம் முடிகிறது என்பதால், இந்த நேரத்தில் குறைந்த இருப்புத் தொகை வங்கிக்கணக்கில் இருந்தால், ப்மீரியம் செலுத்த முடியாமல் போகும்.

குறிப்பாக பிராதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஸா பிமா யோஜனா ஆகிய இரு காப்பீடுகளை புதுப்பிக்கும் காலக்கெடு மே 31ம் தேதியோடு முடிகிறது. ஆதலால், ரூ.4 லட்சம் காப்பீடு பலன்களை கிடைக்க வேண்டுமென்றால், வங்கியில் இருப்பு வைத்திருத்தல் அவசியம்.
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு(PMJJBY)
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு திட்டம் என்பது 18வயது முதல் 50 வயதுள்ளவர்களுக்கான திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றவர் ஒருவர் திடீரென உயிரிழப்பைச் சந்தித்தால், அவரிந் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக் காப்பீடு ரூ.330 செலுத்த வேண்டும், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்தக் காப்பீடு பெற விரும்பும் ஒருவர் அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சலகத்துக்குச் சென்று காப்பீடு பெறலாம். காப்பீடு பெற்றபின் ஆண்டு ப்ரீமியம் வங்கிக்கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும்.

பிரதமர் சுரக்ஸா பிமா யோஜனா
பிரதமர் சுரக்ஸா பிமா யோஜனா காப்பீடு திட்டம் என்பது விபத்துக்கால காப்பீடாகும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற ஒருவர், விபத்தில் உயிரிழந்தால், அவரின் வாரிசுதாருக்கோ அல்லது மனைவிக்கோ இழப்பீடு தொகை கிடைக்கும். இந்திய குடிமக்கள் 18வயது முதல 70 வயதுள்ளவர்கள் இந்த காப்பீட்டைப்பெறலாம். காப்பீடுதாரர் ஏதேனும் விபத்தில் சிக்கி காயமடைந்தால், அவருக்கு இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.ஒருலட்சம் இழப்பீடு கிடைக்கும். உயிரிழப்பைச் சந்தித்தால் ரூ.2 லட்சம் குடும்பத்தாருக்கு கிடைக்கும்.
இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டு ப்ரீமியம் ரூ.12 மட்டும்தான். ஆக ரூ.4 லட்சம் மதிப்பிலான இரு காப்பீடு திட்டங்களின் பலன்களைப் பெற ஆண்டுக்கு ரூ.342 செலுத்தினால் போதுமானது. ஆதலால், இந்த இரு காப்பீடு எடுத்துவர்கள், தங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புக்கும் குறைவில்லாமல் பணம் வைத்திருந்தால் ஆட்டமேட்டிக்காக பணம் டெபிட்டாகும்
