எரிபொருள், உணவுப் பொருட்கள் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி

PM Modi in 8th G7 summit 2022: உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பெட்ரோல்,டீசல் விலை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

pm modi in G7 summit: says rising prices of energy, food grains affecting all

உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பெட்ரோல்,டீசல் விலை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜெர்மனிய்ல ஜி7 உச்சி மாநாடு நடந்து வருகிறது. ஜெர்மன் பிரதமர் ஒலப் ஸ்காலஸ் அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.இந்தியா தவிர்த்து, அர்ஜென்டியா, இந்தோனேசியா, செனகல், தென்ஆப்பிரிக்காவையும் ஜி7 மாநாட்டுக்கு அழைத்துள்ளது ஜெர்மனி அரசு.  

pm modi in G7 summit: says rising prices of energy, food grains affecting all

காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படுமா?

ஜி7 மாநாடு தொடக்கத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ உள்ளிட்ட ஜி7 நாடுகள் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: 

ரஷ்யா-உக்ரைன் இடையிலான இந்த பதற்றமான சூழலிலும், நாங்கள் இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலமே பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புவிஅரசியல் பதற்றம் ஐரோப்பிய நாடுகளை மட்டும் பாதி்க்கவில்லை, பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது.

வளரும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலை உயராமல் கிடைக்க வேண்டும் என்பது சிக்கலாக இருக்கிறது. இந்த சவாலான நேரத்திலும் இந்தியா பல நாடுகளுக்கு  உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தது. இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு மனிநேய உதவியாக 35ஆயிரம் டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்தது. ஆப்கானிஸ்தானில் கடும் பூகம்பம் ஏற்பட்டவுடன் முதல்நாடாக இந்தியாதான் நிவாரண உதவிகளை வழங்கியது. இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினையின்போதும், இந்தியாதான் உணவுப் பொருட்களை வழங்கி உதவி வருகிறது.

pm modi in G7 summit: says rising prices of energy, food grains affecting all

6 மாதங்களுக்குப்பின் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்படும்? விரிவான பார்வை

ஆதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு அவசியம், அதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும். உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், அதன் விலை உயராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்தியாவில் உரங்கள்உற்பத்தியைஅதிகப்படுத்த முயன்று வருகிறோம். இந்த நேரத்தில் ஜி7 நாடுகள் உதவ வேண்டும். ஜி7 நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேளாண் துறையில் அளப்பரிய மனிதவளம் இருக்கிறது. இந்தியாவின் வேளாண் திறமை புதிய பாரம்பரியமான வேளாம் பொருட்களை ஜி7 நாடுகளுக்குவழங்க உதவும்.

ஜி7 நாடுகளில் இ்ந்தியாவின் வேளாண் திறனை பயன்படுத்துக்கொள்ள புதிதாகத் திட்டம் தீட்ட முடியுமா. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய திறனின் உதவியுடன் ஜி7 நாடுகளில் உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். 

pm modi in G7 summit: says rising prices of energy, food grains affecting all

காசையும் இழக்கணும் வரியும் கட்டணும்: 28%ஜிஎஸ்டி வரி செலுத்த தயாராக இருங்க?

அடுத்த ஆண்டில் உலகம் சர்வதேச தானிய ஆண்டைக் கொண்டாட இருக்கிறது. அந்த நேரத்தில் தானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா பிரச்சாரம் செய்யும். உலகில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.இந்தியாவில் இயற்கை வேளாண்மை எனும் புரட்சி நடப்பது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இந்த பரிசோதனையில் உங்கள் வேளாண் வல்லுநர்கள் ஈடுபடலாம், உங்களுடன் இதை நாங்கள் பகிரந்து கொள்கிறோம்
மகளிர் மேம்பாட்டை இ்ந்தியா முன்னெடுத்து வருகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்களைக்காக்கும் முன்களப்பணியாளர்களாக 60 லட்சம் பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

pm modi in G7 summit: says rising prices of energy, food grains affecting all

தங்கத்துக்கு இ-வே பில் கட்டாயமாக்கப்படுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் எங்கள் பெண் விஞ்ஞானிகள் பலர் பெரும் பங்களிப்பு செய்தனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கிராமப்புற சுகாதாரத்தில் ஆஷா பணியாளர்களாக உள்ளனர். இந்தஆஷா பணியாளர்களை உலக சுகாதார அமைப்பே கவுரவித்துள்ளது. எங்கள் நாட்டில் உள்ளாட்சி முதல் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் பாதிக்குமேல் பெண்கள் இருக்கிறார்கள்.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் லட்சங்களில் இருக்கும். இதன் மூலம் இன்றைய நடப்பில் உண்மையான முடிவு எடுப்பதில்பெண்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios