gst council meeting: வரி்ந்துகட்டும் எதிர்க்கட்சிகள்: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படுமா?

States To Push For Compensation Beyond June:மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது 2022, ஜூன் மாதத்தோடு முடிகிறது, இது மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து இன்று தொடங்கும்  ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கடுமையாக வலியுறுத்துவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த 2 நாட்களும் ஜிஎஸ்டி கூட்டத்தில் அனல்பறக்கும் விவாதம் நடக்கலாம்

GST Council Meet: States To Push For Compensation Beyond June

GST Council Meet: :மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது 2022, ஜூன் மாதத்தோடு முடிகிறது, இது மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து இன்று தொடங்கும்  ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கடுமையாக வலியுறுத்துவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த 2 நாட்களும் ஜிஎஸ்டி கூட்டத்தில் அனல்பறக்கும் விவாதம் நடக்கலாம்

GST Council Meet: States To Push For Compensation Beyond June

ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டம் நாளை, நாளை மறுநாள்(28,29ம் தேதிகளில்) சண்டிகரில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் இழப்பீடு வழங்குவது நீ்ட்டிப்பு கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் எழுப்பும் எனத் தெரிகிறது. 

5 ஆண்டுகள் முடிந்தது

ஜிஎஸ்டி வரி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களின் வாட் வரிவிதிப்பு ரத்தானது.ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பீட்டுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதாவது 2022, ஜூன் மாதம் வரை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீடு தரும் எனக் கூறப்பட்டது.

இளம் பெண்களுக்காக! நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவிட இதைவிட 7 சிறந்த வழிகள் இருக்காது

அந்தவகையில் மத்திய அரசு இழப்பீடு தருவதாகக் கூறியக் காலக்கெடு ஜூன் மாதத்தோடு முடிகிறது. இதனால் ஜூலை மாதத்திலிருந்து மாநிலங்களுக்கு வரி இழப்பீடு மத்தியஅரசு வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

GST Council Meet: States To Push For Compensation Beyond June

கொரோனா தொற்று

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று, லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மாநில அரசுகள் வரிவசூல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசுக்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து 2020-21ம் ஆண்டில் ரூ.1.10 லட்சம் கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.1.59 லட்சம் கோடியும் மத்தியஅரசு கடன் பெற்றுஇழப்பீடு வழங்கியது. இதற்கிடையே ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வசூலிப்பை 2026ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதிவரை நீட்டித்து நேறறு முன்தினம் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசு வாங்கிய கடனுக்கு கடந்த நிதியாண்டு ரூ.7500 கோடியும், நடப்பு நிதியாண்டில் ரூ.14ஆயிரம்கோடியும் வட்டி செலுத்த வேண்டும். அடுத்த நிதியாண்டிலிருந்து கடனுக்கான அசல்தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் 75 திருப்பூர் மாதிரிகள்: பியூஷ் கோயல் திட்டம்

வடகிழக்கு மாநிலங்கள்

மத்திய அரசு புள்ளிவிவரங்கள்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு இனிவரும் ஆண்டுகளுக்கு வழங்கத் தேவையில்லை எனத்தெரிகிறது.ஆனால், பாஜகஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரிக்கை வெவ்வேறாக இருக்கிறது. 

GST Council Meet: States To Push For Compensation Beyond June

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டிஇழப்பீடு வழங்குவதை மேலும் 2ஆண்டுகளுக்கு நீட்டித்தால்தான் கடந்த2 ஆண்டுகளில் ஏற்பட்ட வரிவருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியும் என்று கோரிக்கை வைக்கின்றன. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் சில, இழப்பீடு தேவையில்லை என்று கூறுகின்றன. ஆதலால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக இருக்கும் எனத் தெரிகிறது.

Form-16 என்றால் என்ன? அடிப்படைத் தகவல்கள்: கேள்விகளும் பதில்களும்

சட்டத்திருத்தம் தேவை

அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு, ஒருவேளை ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புத் அளித்தாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் 101வது சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அது மழைக்காலக் கூட்டத்தொடரில்தான் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடியும். 

GST Council Meet: States To Push For Compensation Beyond June

நிலைமை மோசமாகும்

அதேசமயம், இழப்பீடு வழங்க முடியாது என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுத்தால், மாநிலஅரசுகளின் வருவாய் மோசமாகப் பாதி்க்கப்படும். 28 சதவீதவரி நிலையில் இருக்கும் பான் மசாலா, புகையிலை, சொகுசுகார்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டஆடம்பர பொருட்களுக்கான வரிவிதிப்பில் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்வு கிடைக்கும்.

தமிழகத்தின் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனும், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தவிர பாஜக ஆளாத மாநிலங்கள் சார்பில் பங்கேற்கும் நிதி அமைச்சர்களும் இதே கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்துவார்கள். கூட்டத்தின் முடிவில்தான் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது தெரியவரும். மாநில்களுக்கான இழப்பீடு நீட்டிப்பு முக்கியப் பிரச்சினையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  எதிரொலிக்கும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios