6 மாதங்களுக்குப்பின் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்படும்? விரிவான பார்வை

top agaendas in 47th GST Council Meeting: 6 மாதங்களுக்குப்பின் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை(28ம்தேதி) சண்டிகர் நகரில் கூடஉள்ளது. இந்த கூட்டம் நாளையும், நாளைமறுநாளும்(29ம்ததேி) நடக்கிறது. 

what are the top agaendas in 47th GST Council Meeting?

6 மாதங்களுக்குப்பின் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை(28ம்தேதி) சண்டிகர் நகரில் கூடஉள்ளது. இந்த கூட்டம் நாளையும், நாளைமறுநாளும்(29ம்ததேி) நடக்கிறது. 

2021-22 ஆண்டில் தமிழகத்தில் 3.2 லட்சம் வர்த்தகர்கள் 1 ரூபாய் கூட GST வரி செலுத்தவில்லை

ஏராளமான பொருட்களுக்கு வரிவிலக்கும், வரிவிலக்கில் இருந்த பொருட்கள் வரிவிதிப்புக்குள்ளும் கொண்டு வரப்படஉள்ளன. 215க்கும்மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிதிப்பில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.

what are the top agaendas in 47th GST Council Meeting?

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

கடைசியாக 2021, டிசம்பர் 31ம் தேதி புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் 6 மாதங்கள் இடைவெளியில் சண்டிகரில் நாளை நடக்கிறது. ஸ்ரீநகரில்தான் நடத்த முறைப்படி அறிவிக்கப்பட்டது, ஆனால் பல மாநில அமைச்சர்கள் வருவதால், பாதுகாப்பு காரணமாக சண்டிகருக்கு கூட்டம்மாற்றப்பட்டது.

இழப்பீடு நீட்டிப்பா

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிதிப்பு மாற்றம், வரிவிதிப்பு ஒழுங்குமுறைப்படுத்துதல் ஆகியவற்றைக் கடந்து, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு 5 ஆண்டுகளுக்கு தரப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி, 2022, ஜூன் மாதத்தோடு முடிகிறது. 

what are the top agaendas in 47th GST Council Meeting?

40 ஆண்டுகளில் ரொம்ப மோசம்: EPFO 8.1 % வட்டிக்கு மத்திய அரசு ஒப்புதல்

கொரோனா காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுன், பொருளதார மந்தம் ஆகிவற்றால் மாநிலங்களுக்கு வரிவருமானம் குறைந்துள்ளது. 

இதனால் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாஜக ஆளாத மாநிலங்கள் கோரிக்கையாக வைத்துள்ளன. இதனால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக அனல்பறக்கும் விவாதம் நடக்கலாம் எனத் தெரிகிறது.

EPF e-பாஸ்புக்கை இருக்கும் இடத்திலிருந்தே எப்படி டவுன்லோடு செய்வது, பேலன்ஸ் தெரிந்துகொள்வது?

வரி வீதத்தில் மாற்றம்

இது தவிர ஜிஎஸ்டி வரிவீதத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரிகள் குழு அளித்த பரிந்துரையில், செயற்கைக்கால்கள், எலும்புமுறிவைச் சரிசெய்யப்படும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரிவிதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இது தவிர கால் எலும்புகளை நேராகப் பயன்படும் பிரேஸ்கள், ஸ்பிலிட் ஆகியவற்றுக்கான வரியும் குறைக்கப்படலாம். தற்போது இந்தப் பொருட்களுக்கு 12 சதவீதம்வரி இருக்கிறது இது குறைக்கப்படலாம்.

what are the top agaendas in 47th GST Council Meeting?

மலைப்பிரதேசங்களில் பயணிகள் செல்லும் ரோப்-கார் பயன்பாட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது, இது 5 சதவீதமாகக் குறைக்கப்படலாம். இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இமாச்சலப்பிரதேச அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் அஸ்டோமி அப்ளையன்ஸ் தொடர்பான பொருட்கள்(பவுச், ஸ்டோமா அட்ஹெசிவ் பேஸ்ட், பேரியர் க்ரீம், இரிகேட்டர் கிட், ஸ்லீவ்ஸ், பெல்ட், மைக்ரோ போர் டேப்) ஆகியவற்றுக்கு தற்போது 12 சதவீத வரிவிதிக்கப்படுகிறது இது 5 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.

கழிவுநீரிலிருந்து சுத்திகரிக்கப்படும் நீருக்கான வரி நீக்கப்படலாம். டெட்ரா பேக்கிங்கிற்கு தற்போது 12 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது அது 18 சதவீதமாக உயர்த்தப்படலாம். 

பேட்டரியில் இயக்கப்படும் வாகனங்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரிவிதிப்பது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. பேட்டரி பொருத்தப்பட்டு வரிவிதிப்பா அல்லது பேட்டரி பொருத்தாமல் வரிவிதிப்பா என்பது குறித்து விளக்கம் தரப்படும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios