gst rate: 2021-22 ஆண்டில் தமிழகத்தில் 3.2 லட்சம் வர்த்தகர்கள் 1 ரூபாய் கூட GST வரி செலுத்தவில்லை
gst: தமிழகத்தில் வணிகவரித்துறை அலுவலகத்தில் பதிவு செய்து ஜிஎஸ்டி உரிமம் பெற்ற வர்த்தகர்களில் 30 சதவீதம் பேர் அதாவது, 3.26 லட்சம் வணிகர்கள் கடந்த 2021-22 நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி வரியாகச் செலுத்தவில்லை எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வணிகவரித்துறை அலுவலகத்தில் பதிவு செய்து ஜிஎஸ்டி உரிமம் பெற்ற வர்த்தகர்களில் 30 சதவீதம் பேர் அதாவது, 3.26 லட்சம் வியாபாரிகள் கடந்த 2021-22 நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி வரியாகச் செலுத்தவில்லை எனத் தெரியவந்துள்ளது.
தமிழக வணிகவரித்துறையின் வரி வசூலிப்பதுறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வி்ல் இந்தத் தகவல் வெளியானது.
இதில் 1.94 லட்சம் வர்த்தகர்கள் 1000 ரூபாய்க்கும் குறைவாகவே ஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளனர்.
11 லட்சம்
தமிழகத்தில் மொத்தம் 11 லட்சம் பதிவுசெய்த வர்த்தகர்கள் உள்ளனர், இதில் 6.72 லட்சம் வணிகர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் மற்றவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் வருவார்கள். சரக்கு மற்றும் பொருட்களை விற்கும் வரிசெலுத்துவோர் ரூ.40 லட்சத்துக்கும், சேவைத் துறையில் ஈடுபடுவோர் ரூ.20 லட்சமும் கையாள வேண்டும் அவ்வாறு கையாள்பவர்களே பதிவு செய்ய முடியும்.
நடவடிக்கை
கடந்த 2020-21ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஜிஎஸ்டி மூலம் கிடைத்த வரிவசூல்15.83% அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபின் கிடைத்த அதிகபட்ச வரிவசூலாகும். நாளுக்கு நாள் வர்த்தகர்கள் வரி செலுத்தாமல் தப்பிப்பதால், வரி செலுத்தாமல் தப்பிக்கும் ஓட்டைகளை அடைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா
கடந்த 6 மாதங்களுக்குரிய ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வசூல் முந்தைய 2020-21ம் ஆண்டைவிட 2021-22ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்தைவிட முன்னணியில் உள்ளன.
வரி செலுத்தாமல் இருப்பது அல்லது மிகக்குறைவான வரி செலுத்துவதை வரி ஏய்ப்பு எனக் கூறமுடியுமா என்று வணிகவரித்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ இப்போது அதுபோன்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஜிஎஸ்டி எண் வாங்கியவர்களின் கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்தபின்புதான் முடிவுக்கு வர முடியும்.
5.2 லட்சம் வர்த்தகர்களுமே வர்த்தகத்தை வரிவரம்புக்குள்தான் வர்த்தகம் செய்தார்கள் என்று கூற முடியாது. பொருட்களை வாங்குபவர்கள் வரி செலுத்துவது அவசியம். குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தாங்கள் இன்புட் கிரெடிட் எடுத்துக்கொள்ளலாம் ” எனத் தெரிவி்த்தார்
கூடுதல் வசூல்
இந்த ஆய்வுக்குப்பின் 5.20 லட்சம் வர்த்தகர்களுக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பி கணக்குகளை சரிபார்க்க கேட்டுக்கொண்டது. இந்த முயற்சியின் விளைவாக, 22,430 வர்த்தகர்கள், ரூ.64.22 கோடி வரியாக கடந்த மே மாதம் செலுத்தியுள்ளனர்.
மற்றொரு முயற்சியாக எந்தெந்த வர்த்தகர்கள் காம்போசிஷன் ஸ்கீம் வரிவிதிப்பை எடுத்துள்ளார்களோ அவர்களை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வெறும் ஒரு சதவீதம் உற்பத்தியாளர்கள்தான் ஆண்டுக்கு ரூ.1.50 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் வைத்துள்ளனர். ஏறக்குறைய 60ஆயிரம் வர்த்தகர்கள் காம்போஷிசன் திட்டத்தில் உள்ளனர்.
அவர்கள் விற்றுமுதல் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறதா அல்லது கடந்துவிட்டதா என்பதை கண்டறிவதுதான் நோக்கமாகும். இதில் 28 வர்த்தகர்கள் கணக்குகளை ஆய்வுசெய்ய தேர்வு செய்யப்பட்டனர். இதைப் பார்த்த 1200 வர்த்தகர்கள் தங்களை காம்போஷிசன் திட்டத்திலிருந்து விலக்கிக்கொண்டு சாதாரண டீலர்களாகப் பதிவு செய்தனர். இவர்கள் கடந்த மாதம் ரூ.84 லட்சம் வரி செலுத்தியுள்ளனர்.
- Commercial Taxes Department
- GST revenue collections
- GST revenue collections.
- Tamil Nadu
- dealers in Tamil Nadu
- gst
- gst in india
- gst login search
- gst portal
- gst price
- gst rate
- gst tax rate
- single rupee
- taxpayers
- types of gst in india
- types of gst returns in india
- types of gst returns
- gst bill
- know your gst number
- tamilnadu gst code
- gst hsn code
- gst code