pf and esi in a single form
தொழிலாளர்களின் நலன் கருதி, பிஎப் மற்றும் இஎஸ்ஐ என்ற இரு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது . இவை இரண்டிலும் இணைவதற்கு இதுவரை தனி தனி படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது . இந்நிலையில், இவை இரண்டிற்கும் ஒரே படிவத்தின் மூலம் இணைவதற்கு அரசு மூயற்சி மேற்கொண்டு வருகிறது
பிஎப் திட்டம் / இஎஸ்ஐதிட்டம்
ஒரு நிறுவனத்தில், 20க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்தால் அவர்களை பிஎப் திட்டத்திலும், 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், இஎஸ்ஐ திட்டத்திலும் சேர வேண்டும் என்பது சட்டம்.
எத்தனை நிறுவனங்கள் பிஎப்/ இஎஸ்ஐ கொண்டுள்ளது ?
நாடு முழுவதும் 4 கோடி நிறுவனங்கள் பிஎப் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 2 கோடி நிறுவனங்களும் இதுவரை உள்ளன.
இந்நிலையில், இவை இரண்டையும் ஒரே படிவத்தின் மூலம் இணைவதற்கு அரசு மூயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இனி மற்ற சிறு நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு பிஎப் மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
