- Home
- விவசாயம்
- Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
தொடர் மழையால் ஏற்படும் பயிர் சேதங்களைத் தவிர்க்க, தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பயிர்களுக்கு மண் அணைத்தல், கவாத்து செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நல்ல விளைச்சலை தரும்.

மழை பெய்தாலும் கவலையில்லை
தொடர் மழையால் பல பகுதிகளில் பாசனம் குளறுபடியாகும் சூழ்நிலையில், தோட்டக்கலைத் துறை விவசாயிகள் முன்கூட்டியே பாதுகாப்பு ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், பயிர்களை பாதுகாக்க இயல்பான நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளது.
தேங்காய் & தென்னை தோட்ட பராமரிப்பு
முதலில், பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் போன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும். மரங்களின் அடிப்பகுதியில் மண் அணைக்கும் பணி அவசியம். அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டங்களில் உடனடியாக அறுவடை செய்து, கவாத்து போன்ற பராமரிப்பு முறைகள் மூலம் மரத்தின் சுமையை குறைத்து காற்றழுத்தத்தால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
மழைக்காலத்தில் தென்னை மரத்தில் பழுத்த தேங்காய்களை உடனே அறுவடை செய்தல் பாதுகாப்பானது. இளநீர், தேங்காய் எடுப்பதுடன் பழைய ஓலைகளை அகற்றிவைத்தல், மரத்தின் சுமையை குறைத்து புயல் பாதிப்பை தடுக்கும்.
வாழை, கொய்யா, மாதுளை பராமரிப்பு
மாமரம் பராமரிப்பு
மா மரங்களில் உலர்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்றி காற்றோட்டத்தை மேம்படுத்த வேண்டும். தண்டுப் பகுதியில் மண் குவித்து நிலைத்தன்மையை அதிகரிக்க வேண்டும்.
வாழை, கொய்யா, மாதுளை பராமரிப்பு
சிறிய மரங்களுக்கு தாங்கு குச்சிகள் கட்டி காற்றிலிருந்து பாதுகாக்கலாம். வாழை தோட்டங்களில் கீழ்ப்பக்க இலைகளை அகற்றி மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்பிகளை ஊன்றுகோலாக பொருத்துதல் நல்லது. கொய்யா, மாதுளைக்கு கவாத்து செய்தல் கூடுதல் பாதுகாப்பு தரும்.
காய்கறித் தாவரங்கள்
தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்துதல், பூஞ்சை நோய் தடுப்பு மருந்துகள் தெளித்தல் முக்கியம். டிரைக்கோடெர்மா விரிடி நிலத்தில், சூடோமோனாஸ் இலையில் தெளித்தல் பயனளிக்கும். பந்தல் காய்கறிகள் சிறந்த வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.
பசுமைக்குடில் (Green House) பாதுகாப்பு
கம்பிகள் வலுப்படுத்தப்பட்டு நிலத்துடன் சிறப்பாக இணைக்கப்பட வேண்டும். கதவுகள், ஜன்னல்கள் முறையாக மூடி உள்ளே காற்று புகாதவாறு பாதுகாக்க வேண்டும். கிழிந்த நிழல்வலைகளை தைத்து சரிசெய்தல் அவசியம்.
ஆரோக்கியமான விளைச்சலை பெற முடியும்
தொடர்மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர் இழப்புகளை குறைத்து ஆரோக்கியமான விளைச்சலை பெற முடியும். முன்கூட்டிய பாதுகாப்பே விளைச்சலின் முதுகெலும்பு!

