பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டு வரும் நிலையில், நாளை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 30 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெட்ரோல் - டீசல் விலை:

கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன் படி, மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இன்று வரை 11 முறை விலை உயர்ந்தப்பட்டு உள்ளது. கடந்த 13 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ.7.53 வரை அதிகரித்துள்ளது. டீசல் விலை 7.61 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 108.21 க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.98.21 க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 104 டாலர் அளவுக்குக் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 13 நாட்களில் 11வது முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐந்து மாநில் சட்டமன்ற தேர்தல்:

கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல் 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81 மற்றும் டீசல் ரூ.91.88 என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு பெட்ரோல், டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. அந்தவகையில் கடந்த 13 நாட்களில் தொடர்ந்து 11 முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 108. 96 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் 99.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் டீசல் விலை விரையில் 100 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது. 

இந்நிலையில் நாளை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 130 ரூபாய் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நகரப்புறங்களில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளைக்கு பெட்ரோல், டீசல் விற்றால் அதிக லாபம் எனும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.