பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு..! 

கடந்த சில நாட்களாக பெட்ரோல்  மற்றும் டீசல் விலையில் தொடர் சரிவு காணப்பட்டு வந்தது. இதற்கு முன்னதாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. பின்னர் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. 

அதன்படி, இன்றைய  நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பற்றி பார்க்கலாம்.
 
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ 73.11-க்கும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ 69.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஒன்றாக பெட்ரோல் டீசல் உள்ளதால், அதன் விலை குறைய வேண்டும் என தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக உள்நாட்டிலேயே சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.