8வது ஊதியக் கமிஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
8வது ஊதியக் கமிஷன் அமலாக்கத்தால் இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வரவிருக்கிறது. இந்த நிதிச் சுமையைச் சமாளிக்க ரயில்வே துறை முன்கூட்டியே திட்டமிட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

8வது ஊதியக் கமிஷன் அப்டேட்
8வது ஊதியக் கமிஷன் அமலுக்கு வரவிருப்பதால், இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புதிய ஊதிய உயர்வை முன்னிட்டு, ரயில்வே துறை முன்கூட்டியே தயாரிப்புகளை தொடங்கியுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் அதிகரிக்கும் நிலையில், அதைச் சமாளிக்க தேவையான ஊதிய நிதி திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே ஊழியர் சம்பள உயர்வு
8வது ஊதியக் கமிஷன் 2025 ஜனவரியில் அமைக்கப்பட்டது, தனது பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 2026 ஜனவரி மாதத்திற்குள் வரும் வாய்ப்பு உள்ளது. கடந்த 7வது ஊதியக் கமிஷன் அனுபவம் ரயில்வேக்கு முக்கிய பாடமாக அமைந்தது. 2016-ல் 7வது ஊதியக் கமிஷன் அமலுக்கு வந்தபோது, ஊழியர்களின் சம்பளம் 14% முதல் 26% வரை உயர்ந்தது. இதனால் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவாக ஆண்டுக்கு சுமார் ரூ.22,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டது. தற்போது 8வது ஊதியக் கமிஷன் அமல்பட்டால், இந்தச் சுமை ரூ.30,000 கோடி வரை உயரும் என உள்நிலைக் கணிப்புகள் கூறுகின்றன.
ரயில்வே சம்பள செய்தி
இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் செலவுக் கட்டுப்பாடு மற்றும் வருவாய் அதிகரிப்பு மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு வருவாயை உயர்த்துவது, செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது, சரக்கு போக்குவரத்து வருவாயை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024–25 நிதியாண்டில் ரயில்வேயின் செயல்பாட்டு விகிதம் 98.90% ஆக இருந்தது. 2025–26 ஆம் ஆண்டில் இதை 98.43% ஆக மேம்படுத்தல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிகர வருவாய் ரூ.3,041.31 கோடியாக உயருமென கணிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் உயர்வு
மின்சார சேமிப்பு ரயில்வேக்கு பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது. முழு ரயில்வே வலையமைப்பும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடி வரை மின்சார செலவு சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2027–28 நிதியாண்டுக்கு பிறகு IRFC-க்கு செலுத்த வேண்டிய தொகையும் குறையும். காரணம், சமீப ஆண்டுகளில் பல மூலதனச் செலவுகள் மத்திய பட்ஜெட் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே
இதற்கிடையில், ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளும் சவாலாக உள்ளன. 7வது ஊதியக் கமிஷனில் 2.57 ஃபேக்டர் ஃபிட் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2.86 ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கோரப்படுகிறது. இது ஏற்கப்பட்டால், சம்பளச் செலவு 22%க்கும் மேல் உயரும். இருப்பினும், சரியான திட்டமிடல் மற்றும் வருவாய் உயர்வின் மூலம் இந்தச் சுமையை சமாளிக்க முடியும் என ரயில்வே நம்புகிறது. அதற்கேற்ப, 2025–26 நிதியாண்டில் ஊழியர் சம்பளத்திற்கான பட்ஜெட் ரூ.1.28 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

