Asianet News TamilAsianet News Tamil

கட்டாயமாகிறது “பார்கிங் சான்றிதழ்”  இல்லையென்றால் புதிய வாகனம் ரத்து....!! மத்திய  அரசு அதிரடி ...!!!

parking space-certificate-is-must-said-cent-govt
Author
First Published Dec 23, 2016, 1:52 PM IST


கட்டாயமாகிறது “பார்கிங் சான்றிதழ்”  இல்லையென்றால் புதிய வாகனம் ரத்து....!! மத்திய  அரசு அதிரடி ...!!!

இனி வரும் காலங்களில்,   வாகனங்களை    நிறுத்தி  வைப்தபற்கு போதுமான  இடம்  உள்ளது  என , சான்றிதழ் கொடுத்து  நிரூபித்தால்  மட்டுமே,  நாம் வாங்கும்  புதிய  வாகனங்களை , பதிவு செய்ய முடியும்  என  மத்திய  அரசு  அறிவித்துள்ளது.

அதாவது,  நகரங்களில்  அதிக  கூட்ட  நெரிசல்  காணப்படுவதால், வண்டியை   நிறுத்துவதற்கு  கூட  இடம் இல்லாமல்  பல  சிக்கல் உள்ளது.

இந்நிலையில், புதியதாக  வாகனம்  வாங்க வேண்டும் என்றால், அந்த  வாகனத்தை நிறுத்துவதற்கு , போதிய  அளவுக்கு    இடம்  உள்ளதை , சான்றிதழ்   வழங்கி  நிரூபித்தால்  மட்டுமே , புதிய  வாகனங்களை  பதிவு செய்ய முடியும் என அமைச்சர் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அடுத்த  கட்ட பேச்சுவார்த்தைக்கு, சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சகத்துடன் நடத்தி வருவதாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு  தெரிவித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios