Asianet News TamilAsianet News Tamil

pan card latest news: தெரிஞ்சுக்கோங்க! இந்த 8 வித பரிமாற்றங்கள், பணிகளுக்கு பான் கார்டு கட்டாயம்

pan card latest news :வங்கியில் பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட்களுக்கு இன்று முதல்(மே-26) புதிய விதிமுறை அமலாகிறது. இது தவிர்த்து பல்வேறு பணிகளுக்கும், பரிமாற்றங்களுக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

pan card latest news: PAN card also mandatory for several transactions
Author
Mumbai, First Published May 26, 2022, 3:11 PM IST

வங்கியில் பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட்களுக்கு இன்று முதல்(மே-26) புதிய விதிமுறை அமலாகிறது. இது தவிர்த்து பல்வேறு பணிகளுக்கும், பரிமாற்றங்களுக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிதி சார்ந்த பரிவர்த்தனைகள், வருமானவரித்துறைக்கு உட்பட்ட சில பணிகளுக்கு பான் கார்டு எனப்டும் நிரந்தர கணக்கு எண் தேவை. இந்த கார்டில் கார்டின் உரிமையாளர் குறித்த விவரங்கள் முழுமையாக அடங்கியிருக்கும். 

pan card latest news: PAN card also mandatory for several transactions

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, , “ஓர் நிதியாண்டில் ஒரு வங்கிக்கணக்கிலிருந்து, ரூ.20 லட்சம் அல்லது அதிகமாக ஒருவர் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம்எடுத்தாலோ பான் கார்டு எண் அல்லது பயோமெட்ரிக்ஆதாரை எண்ணை வழங்குவது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் நடப்புக்கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு வங்கியில் தொடங்கும்போதும் பான் கார்டு எண் வழங்குவது கட்டாயம். இது சாதாரண வங்கி மட்டுமல்ல கூட்டுறவு வங்கி, அஞ்சல வங்கிக்கும் பொருந்தும். 

இந்த புதிய விதிமுறை நடப்புக் கணக்கு தொடங்குவோர், கூட்டுறவு வங்கி, அஞ்சல வங்கியில் ரொக்க கடன் கணக்கு தொடங்குவோருக்கும் பொருந்தும். பான்கார்டு இல்லாதவர் ஒருவர் இந்த பரிமாற்றங்களைச் செய்யவதற்கு முன் 7 நாட்களுக்கு முன்பாக பான்கார்டுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pan card latest news: PAN card also mandatory for several transactions

இவை தவிர்த்து சில பரிமாற்றங்கள், பணிகளுக்கும் பான் கார்டுபயன்படுகிறது 

1.  வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, வருமான வரி அதிகாரிகளுடன் ஏதேனும் தகவல் பரிமாற்றத்துக்கும் ன்          கார்டு எண் குறிப்பிட வேண்டும்.

2.  பல்வேறு விதமான பரிமாற்றங்களுக்கும் பான் கார்டு அவசியம். குறிப்பாக வங்கிக்கணக்கு, டீமேட் கணக்கு, கிரெடிட்           கார்டு வாங்கவும் பான் கார்டு அவசியம்

3. பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் முதலீடு செய்தல், பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்தல்                    ஆகியவற்றுக்கு பான்கார்டு அவசியம்

pan card latest news: PAN card also mandatory for several transactions

4. ஒரு நிதியாண்டில் வாழ்நாள் காப்பீட்டுக்கு ரூ.50ஆயிரத்துக்கு மேல் ப்ரீமியம் செலுத்துவதாக இருந்தால் காப்பீடு தாரர்       பான்கார்டு எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

5. ஒரு நாளில், ஒரே நேரத்தில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யும் போது பான் கார்டு எண்                           தெரிவிக்கவேண்டும். அல்லது ஓர் நிதியாண்டில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் அல்லது ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக வைப்புத்       தொகையை வங்கியிலோ அல்லது கூட்டுறவு வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வைத்தால் அதற்கும் பான்              கார்டு   அவசியம்

6.  கார், இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை விற்கவோ அல்லது வாங்கவோ பான் கார்டு எண் அளிப்பது                   கட்டாயம்

7. ஹோட்டலில் தங்குவது, உணவு சாப்பிடுவது உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில்ரூ.50ஆயிரத்துக்கு மேல் கட்டணம்                செலுத்தும்போது பான் கார்டு எண் வழங்க வேண்டும். அல்லது வெளிநாட்டு கரன்ஸியில் ஒரே நேரத்தில் பில்                       செலுத்தினாலும் பான் கார்டு எண் வழங்குவது அவசியம்

8.  இந்த பரிமாற்றங்களுக்கு பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண் வழங்கிட வேண்டும். இந்தபரிமாற்றங்களுக்கு                ஆதார் அல்லது பான் எண் வழங்காதவர்களுக்கு அபராதம்விதிக்ககப்பட்டு வருமானவரித்துறையால் நோட்டீஸ்                     வழங்கப்படும்

Follow Us:
Download App:
  • android
  • ios