PAN card : வங்கிக் கணக்கிலிருந்து ஓர் நிதியாண்டில் ரூ.20 லட்சம் பணம்டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ பான் கார்டு எண் கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கிக் கணக்கிலிருந்து ஓர் நிதியாண்டில் ரூ.20 லட்சம் பணம்டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ பான் கார்டு எண் கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல வர்த்தக நிறுவனங்கள் வங்கியில் நடப்புக் கணக்கு தொடங்கினாலும் தொடங்கும் நபரின் பான் எண்ணையும் கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டஅறிவிக்கையில் “ ஓர் நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதிகமாக ஒருவர் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம்எடுத்தாலோ பான் கார்டு எண் அல்லது பயோமெட்ரிக்ஆதாரை எண்ணை வழங்குவது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் நடப்புக்கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு வங்கியில் தொடங்கும்போதும் பான் கார்டு எண் வழங்குவது கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளது
ஏகேஎம் குலோபல் டேக்ஸ் பார்ட்னர் நிறுவனத்தின் சந்தீப் சேஹல் கூறுகையில் “ வங்கி, அஞ்சலகம், கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, டெபாசிட், பணம் எடுத்தலை வெளிப்படைத்தன்மையுடன் கொண்டுவரே மத்தியஅரசு இந்த விதியைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி ரூ.20லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் வங்கியிலிருந்து எடுத்தாலோ பான் எண் வழங்குவது கட்டாயம். பணம் எடுக்கும்போது பான் கார்டு எண் வழங்கினால் அந்த பணம் எங்கு செல்கிறது என்பதை அரசால் கண்காணிக்க முடியும். சந்தேகத்துக்கிடமான பணம் டெபாசிட், பணம் எடுத்தலை கண்காணிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

வரிசெலுத்துவோர் தனது பான் எண்ணை, வருமானவரித்துறை தொடர்பான அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் குறிப்பிடுவது அவசியமாகும்.
பான் கார்டு கட்டாயமாக்கப்பட்ட அம்சங்கள்
- ஓர் நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்குஅதிகமான தொகையை வங்கி, கூட்டுறவு வங்கி, அஞ்சலகம் ஆகியவற்றில் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் கார்டு வழங்குவது கட்டாயம்.
- ஓர் ஆண்டில் செய்யப்படும் ரூ.20 லட்சம் வரையிலான டெபாசிட் மற்றும் பணம் எடுத்தலுக்கும் பான்கார்டு கட்டாயமாகும். ரூ. 50ஆயிரத்துக்கு குறைவாக எடுத்தாலும் பான்கார்டு எண் அவசியம் தெரிவிக்க வேண்டும்
- வங்கி அல்லது அஞ்சலகத்தில் ஒருவர் நடப்புக் கணக்கு தொடங்கினாலும் பான் கார்டு எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
