Asianet News TamilAsianet News Tamil

aadhaar pan link status: பான்-ஆதாரை இணைக்காவிட்டால் இன்றுமுதல் 2 மடங்கு அபராதம்: எவ்வாறு பரிசோதிப்பது?

இந்தியர் ஒவ்வொருவரும் இரு முக்கிய ஆவணங்களை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதில்  ஆதார், பான் கார்டை இணைப்பு அவசியமானது. இரு ஆவணங்களையும் இணைக்காதவர்களுக்கு (இன்று முதல்)ஜூலை 1ம் தேதி முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். 

pan aadhaar link : if not done double fine from july1: how to link, check status
Author
New Delhi, First Published Jun 28, 2022, 2:29 PM IST

இந்தியர் ஒவ்வொருவரும் இரு முக்கிய ஆவணங்களை இணைக்க வேண்டும். அதிலும் ஆதார், பான்கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருமானவரி செலுத்துவோர் பான்கார்டு, ஆதாரை இணைக்க 2022, மார்ச் 31வரை காலக்கெடு விதித்திருந்தது. 

ஜிஎஸ்டி பதிவு செய்வதிலிருந்து சிறிய ஆன்-லைன் நிறுவனங்களுக்கு விலக்கு?

அந்தக் காலக்கெடுவும் முடிந்து, மீண்டும் நீட்டிப்பு வழங்கப்பட்டு 2023, மார்ச் 31ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டது. 
இதில் 2022, மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார்,பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தது மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT). இந்தக் காலக்கெடுவும் ஜூன் 30ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின்பும் இணைக்காமல் இருப்பவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அபராதம் இரு மடங்காக வசூலிக்கப்படும், அதாவது ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்.

pan aadhaar link : if not done double fine from july1: how to link, check status

 இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?

மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கிய காலக்கெடுவுக்குள் ஆதார்,பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாக்கப்படும். மேலும் அந்த நபர் எந்த ஒரு அரசு சார்ந்த, வங்கிகளில் பான் கார்டை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அதனால் வரும் சட்ட நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும். 

google, Amazon வேண்டாம்! படிக்கும்போதே facebookக்கில் வேலை பெற்ற அங்கன்வாடி ஊழியர் மகன்

பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என எவ்வாறு பரிசோதிப்பது?

1.    incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்

2.    பான் எண், ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும்

3.    வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்

4.    ஆதார்,பான் இணைக்கப்பட்டதா என்ற விவரத்தை திரையில் தெரிவிக்கும்.

pan aadhaar link : if not done double fine from july1: how to link, check status


ஆதார்-பான் எண்ணை ஆன்லைன் மூலம் எவ்வாறு இணைப்பது?

1.    www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்.

2.    குயிக் லிங்க் பிரிவில், லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

3.    பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.

4.    ஆதார் எண்ணில் குறிப்பிட்டபடி பிறந்த தேதி இருந்தால், அங்குள்ள டிக் பாக்ஸில் டிக்செய்து ஆதார் விவரங்களை சரிபார்க்கலாம்.

5.    கேப்சா எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும்

6.    லிங்க்-ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்து இணைக்கலாம்

டாடா குழுமத்தின் முக்கியப் பங்குதாரர் தொழிலதிபர் பலூன்ஜி மிஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

pan aadhaar link : if not done double fine from july1: how to link, check status

எஸ்எம்எஸ் மூலம் எளிதாக இணைக்கலாம்

ஆதாரில் பதிவு செய்த செல்போன் எண்ணிலிருந்து 567678 அல்லது56161 என்ற எண்ணக்கு UIDPAN(12இலக்க ஆதார் எண்)(10இலக்க பான் எண்) ஆகியவற்றை பதிவிட்டு அனுப்ப வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios