பழைய வாகனங்களை அழிக்கும் புது முயற்சியில் மத்திய அரசு ....!!!
சுற்றுச்சூழலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்காக, பழைய வாகனங்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஜெர்மனிக்கு அழைப்பு விடுக்கப் பட்டது என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பழைய கனரக வாகனங்களை வாகன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் (Voluntary Vehicle Fleet Modernisation Programme) அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வாகன மாசுபாட்டை குறைப்பதற்காக எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த அனுமதி அளித்தது உட்பட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரிப்பது போல் சுற்றுச்சூழலுக்கு சாதகமான எரிபொருளில் இயங்கும் கார் களை இந்தியாவில் தயாரிக்க வருமாறு ஜெர்மனிக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
