உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக பேரல் 102 டாலராக அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக பேரல் 102 டாலராக அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீது இன்று காலை ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதும், பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 102 டாலராக 4 % அளவு உயர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் அதிகமாகி இருப்பது இதுதான் முதல்முறையாகும்
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்ததற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்ததில் இருந்து போர் பதற்றம் ஏற்படத்தொடங்கியது. உக்ரைனின் இரு மாநிலங்களுக்கு சுயாட்சி அளித்து ரஷ்யா அறிவித்ததும், அந்த மாநிலங்களுக்குள் ரஷ்ய படைகள் செல்ல இருப்பதை உலகநாடுகள் கண்டித்தன.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் வங்கிகள், நிறுவனங்கள் மீது நிதித் தடை மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்க நிதியளிக்கத் தடை விதிக்கப்பட்டன. ஜெர்மனி, பிரிட்டனும் நிதித்தடையை ரஷ்யா மீது விதித்தன.
இதனால், பிரண்ட் கச்சா எண்ணெய்விலை வரும் நாட்களில் மேலும்அதிகரி்க்கும் என்று கூறப்பட்டது. பிரண்ட் கச்சா எண்ணெய் கடந்த இரு நாட்களுக்கு முன்புவரை பேரல் ஒன்று 98 டாலராக இருந்தநிலையில், ரஷ்யா மீது நிதித்தடை விதித்தவுடன் பேரல் 100 டாலரை எட்டியது.
அமெரிக்கா வெஸ்ட் டெக்ஸ்சாஸ் சந்தை கச்சா எண்ணெய் பேரல் 96 டாலராக உயர்ந்தது.

விலை உயர்வுக்கு காரணமென்ன
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்தது உலகளவில் எரிபொருள் உற்பத்தி, சப்ளையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லிபியா முதல் ஈக்வெடார் வரை, நைஜிரியாவரை ஏற்கெனவே கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால் தேவைக்கும் குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ரஷியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுதான் ஐரோப்பிய நாடுகளுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள போரால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை உலக நாடுகளுக்கு அனுப்புவதிலும் சிக்கல் ஏற்படும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான 30 முதல் 40 சதவீத கச்சா எண்ணெய் மற்றும்இயற்கை எரிவாயுவை ரஷியா வழங்கி வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 11 சதவீதத்தையும் ஐரோப்பிய நாடுகளின்எரிவாயு, கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 60 சதவீதத்தையும் ரஷியா வைத்துள்ளது. ரஷியா கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதியை நிறுத்தினால் அது உலகளவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும்.

இப்போதுள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும், உலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் விலை மேலும் அதிகரிக்கும். பேரல் 110 டாலருக்கும் செல்லும் அச்சம் இருப்பதாக உலக பல்வேறு சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபேக் நாடுகள் உற்பத்தியை அதிகப்படுத்தக்கூட அவசியம் இல்லை. அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால், ஈரானிலிருந்து வரும் கச்சா எண்ணெய் உலக நாடுகளின் தேவையை சமாளிக்க போதுமானதாக இருக்கும். நாள்தோறும் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கிடைக்கும்போது தேவையை ஈடுகட்ட முடியும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
