NSE scam: தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழலில் கைது செய்யப்பட்ட, முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழலில் கைது செய்யப்பட்ட, முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

14 நாட்கள் காவல் 

கோ-லொகேஷன் வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ராவை விசாரிக்க சிபிஐக்கு வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் இன்று முடிந்ததையடுத்து, அவரை நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தினர். இதையடுத்து, சித்ராவை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

கோ-லொகேஷன் ஊழல்

என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

இதைப் படிங்க: என்எஸ்இ ஊழல்: ஆனந்த், சித்ராவின் செஷல்ஸ் தீவு உல்லாசப் பயணம்: சிபிஐ விசாரிக்க முடிவு

அபராதம்

இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டுஎழுந்தது. இ்ந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த்சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதி்த்தது.

இந்நிலையில் கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியை கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்தது. சித்ராவை கடந்த வாரம் கைது செய்து விசாரணைக்கு எடுத்தனர். 

சித்ரா ஆஜர்

சிபிஐ விசாரணைக் காலம் முடிந்ததையடுத்து, இன்று நீதிமன்றத்தில் சித்ராவை ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் கூறுகையில் “ சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக்காலத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப் படிங்க: என்எஸ்இ ஊழல்: இமயமலை யோகியும் ‘இவரே’, இமெயில் உருவாக்கியதும் ‘இவரே’: நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

தகுதியில்லாத நபரான ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஆலோசகர் பதவி வழங்கி, அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில்ஊதிய உயர்வு அளித்துள்ளார். இதுதொடர்பாக என்ஆர்சிக்கும், வாரியத்துக்கும் சித்ரா எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

ரகசிய தகவல்கள்

இதை படிக்க மறக்காதிங்க: இப்படி ஊழல் செய்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்: சித்ரா வழக்கில் சிபிஐ நீதிமன்றம் காட்டம்

மேலும் என்எஸ்இ தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனிடம் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமிக்கும் முன்பே அவருடன் சித்ராவுக்கு பழக்கம் இருந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியனின் மனைவி சுனிதா சுப்பிரமணியன் சென்னை என்எஸ்இயில் கடந்த 2011ம் ஆண்டு பணியாற்றியுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஆனந்த் சுப்பிரமணியன் சார்பி்ல் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.