NSE scam:தேசியப் பங்குச்சந்தையில்(NSE) இப்படியெல்லாம் ஊழல் நடந்தால் யார் இந்தியாவில் முதலீடு செய்வார்கள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்தது.
தேசியப் பங்குச்சந்தையில்(NSE) இப்படியெல்லாம் ஊழல் நடந்தால் யார் இந்தியாவில் முதலீடு செய்வார்கள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்தது.

கோ-லொகேஷன் ஊழல்
தேசியப் பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டுவரை இருந்தபோது கோ-லொகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, தேசியப் பங்குச்சந்தையின் சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்குதரகர்களின் சர்வர்களை வைத்து பங்குகளின் விலையை மற்ற தரகர்கள் அறிந்துகொள்ளும் முன்பே விரைவாக அறியும்வகையில் வசதி செய்யப்பட்டது.

2018ல் வழக்குப்பதிவு
இதுதொடர்பாக எழுந்தபுகாரையடுத்து கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இதற்கிடையே சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக்காலத்தில் செபியின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், தனதுஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை அதிகமான ஊதியத்துக்கு நியமித்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி விசாரி்த்து சித்ராவுக்கு ரூ.3 கோடி அபராதம், ஆனந்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்தது

ஆனந்த் கைது
இந்த கோ-லொகேஷன் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கடந்த மாதம் ஆனந்த் சுப்பிமணியத்தை கைது செய்தது. அதைத் தொடர்ந்து சித்ராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி,வீட்டில் ரெய்டு நடத்தினர்.
சித்ராவுக்கு 7 நாள் காவல்
ஆனால், சிபிஐ விசாரணைக்கு சித்ரா முழுமையாக ஒத்துழைக்கவில்லை. சித்ரா தாக்கல் செய்தமுன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சித்ராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அ வரை 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆனந்த் சுப்பிரமணியத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தவிட்டது.

ஆனந்த் ஆஜர்
இதனால், ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் கூறுகையில் “ ஆனந்த் சுப்பிரமணியத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவிட்டார்கள். இனிமேல் காவலில்எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்பலாம்”எ னத் தெரிவித்தார்.

யார் முதலீடு செய்வார்கள்
இதற்கு நீதிபதி அகர்வால், “ இந்த வழக்கை கடந்த 4 ஆண்டுகளாகசிபிஐ விசாரித்து வந்து இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்த வேகம்,செயல்பட்டதில் போதுமான அளவு வேகமமும், ஆர்வமும் இல்லை.
தேசியப் பங்குச்சந்தையில் இப்படியெல்லாம் ஊழல் செய்தீர்கள் என்றால், இந்தியாவி்ல் யார் முதலீடு செய்ய வருவார்கள்” என்றுஆதங்கத்துடனும், கோபத்துடனும் கேட்டார்.
அதன்பின் ஆனந்த் சுப்பிரமணியத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
