NSE scam: தேசியப் பங்குசந்தையில் நடந்த கோ-லோகேஷன் ஊழல் வழக்குக் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, அவரின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியம் இருவரும் செஷல்ஸ் தீவுக்கு உல்லாசப் பயணம் சென்றதுகுறித்து விசாரிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசியப் பங்குசந்தையில் நடந்த கோ-லோகேஷன் ஊழல் வழக்குக் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, அவரின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியம் இருவரும் செஷல்ஸ் தீவுக்கு உல்லாசப் பயணம் சென்றதுகுறித்து விசாரிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நியமனம்
தேசியப் பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டுவரை இருந்தார். இவரின் பதவிக்காலத்தில் விதிமுறைகளை மீறி ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு குறுகியகாலத்தில் சித்ரா ஏராளமான சலுகைகளையும், கோடிக்கணக்கில் ஊதிய உயர்வையும் வாரி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இமயமலை யோகி
இருவருக்கும் இடையே ரகசிய மின்அஞ்சல் பரிவர்த்தனையும் நடந்துள்ளது. இமயமயோகியின் அடையாளதில் இருந்த ஆனந்த் சுப்பிரமணியம், ரிக்யஜுர்சாம என்ற பெயரில் மின்அஞ்சல் உருவாக்கி, அதில் சித்ராவுடன் தகவல் தொடர்பு செய்துள்ளார். இருவருக்கும் இடையிலான ரகசிய தகவல் பரிமாற்றத்தில் என்எஸ்இ தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களை சித்ரா இமயமலை யோகியிடம் பகிர்ந்துள்ளார் இது தொடர்பாக எழுந்தபுகாரில் விசாரணை நடத்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அனைத்தையும் கண்டறிந்தது. இதையடுத்து,சித்ராவுக்கு ரூ.3 கோடி அபாரதமும், ஆனந்த்சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.
இதைப டிக்க மறக்காதிங்க: : பணமதிப்பிழப்பிலிருந்து நாம் முழுமையாக மீளவில்லை: ரகுராம் ராஜன் விளாசல்
கோ-லொகேஷன் ஊழல்
சித்ரா பணிக்காலத்தில், என்என்சி சர்வர்கள் வைக்கும் இடத்தில், பங்குவர்த்தகம், பங்குவிலை, பிரமாற்றம் ஆகிய தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன.இது தொடர்பாக எழுந்தபுகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கைது
இந்தவழக்கில் ஆனந்த் சுப்பிரமணியத்தை கடந்த மாதம்24ம் தேதி சிபிஐ கைது செய்தது, கடந்த வாரம் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. இருவரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இதில் இமயயோகி பெயரில் ஆனந்த் சுப்பிரமணியனும், சித்ராவும் பரிமாறிக்கொண்ட தகவல்கள் அடங்கிய மின்அஞ்சல்களை சிபிஐ ஆய்வு செய்ததில் இருவரும் செஷல்ஸ் தீவுக்குச் சென்று உல்லாக இருப்பதற்கு திட்டமிட்டு சென்றது குறித்து விசாரிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதைப் படிங்க: இப்படி ஊழல் செய்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்: சித்ரா வழக்கில் சிபிஐ நீதிமன்றம் காட்டம்
உல்லாசப் பயணம்
சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் “கடந்த 2015ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் தேதி ரிக்யஜுர்சாம மின்அஞ்சலில் இருந்து சித்ராவுக்கு ஒரு மின்அஞ்சல் சென்றதுள்ளது. அதில், “உன்னுடைய உடைகள், பெட்டிகளை தயாராக வைத்துக்கொள், அடுத்தமாதம் செஷல்ஸ் தீவுக்கு செல்ல திட்டமி்ட்டுள்ளேன். என்னுடன் நீ வருவதற்கு முயற்சி செய். உனக்கு நீச்சல் தெரியும்தானே”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்பிரமணியமும் செஷல்ஸ் தீவுக்கு உல்லாசப் பயணம் சென்றது குறித்துவிசாரிக்க இருக்கிறோம். இந்த பயணம் சாதாரண பயணம் அல்ல என்று சந்தேகிக்கிறோம்.

மைக்ரோசாப்ட் உதவி
சித்ராவுக்கும், ரிக்யஜுர்சாம எனும் மின்அஞ்சலுக்கும் இடையே நடந்த உரையாடல்களை மீண்டும் எடுக்க முயற்சித்து வருகிறோம். இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் உதவியை நாட இருக்கிறோம்.
இதைப் படிங்க: என்எஸ்இ ஊழல்: இமயமலை யோகியும் ‘இவரே’, இமெயில் உருவாக்கியதும் ‘இவரே’: நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்
ஆனால், சித்ராவிடம் நடத்திய விசாரணையில் ரிக்யஜுர்சாம எனும் மின்அஞ்சலில் பேசியவர் சித்த புருஷா அல்லது பரமஹம்சா. அவருடன் நேரடியான தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மின்அஞ்சலை உருவாக்கியதே ஆனந்த் சுப்பிரமணியன்தான் என சந்தேகிக்கிறோம். என்எஸ்இ சிஇஓ பதவியிலிருந்து விலகியபின், அவரின் கணினியில் உள்ள அனைத்து விவரங்களும் அழிக்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது
