NSE Scam:  என்எஸ்இ கோ-லொகேஷன் ஊழல்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல்செய்த முன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க இன்று மறுத்துவிட்டது என்று சிஎன்பிசி சேனல் தெரிவித்துள்ளது.

: என்எஸ்இ கோ-லொகேஷன் ஊழல்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல்செய்த முன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க இன்று மறுத்துவிட்டது என்று சிஎன்பிசி சேனல் தெரிவித்துள்ளது.

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டதில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுந்தது. ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ஆண்டுக்கு 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்றும் புகார்கள் வந்தன. 

20 ஆண்டுகளாக யோகி ஒருவரின் ஆலோசனைப்படிதான் சித்ரா என்எஸ்இயை வழிநடத்தியதாக பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்ரமணியனுக்கு ரூ.2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.இருவரும் 3 ஆண்டுகள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டது.

கடந்த மாதம் 17ம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவின் மும்பை இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்ிதனர். இமயமலை யோகியிடம் என்எஸ்இயின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டது குறித்து சிபிஐ அமைப்பும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதற்கிடையே என்எஸ்இ சர்வர்கள் வைக்கப்பட்டிருக்கும் அருகே சில குறிப்பிட்ட பங்குதரகர்களின் சர்வர்களை வைத்து பங்குவர்த்தக தகவல்களை விரைவாக பகிர்ந்த புகார் தொடர்பாக சிபிஐ கடந்த 2018ம் ஆண்டிலிருந்து விசாரித்து வருகிறது

இந்த வழக்கில் சில பங்குவர்த்தகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த மாதம் 25ம் தேதி ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது.இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைதுசெய்யாமல் இருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐதரப்பில் சித்ராவுக்கு ஜாமீன்வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக த கவல்கள் தெரிவிக்கின்றன. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சித்ராவின் ஜாமீன்மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது