nirmala sitaraman : இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறும் நிலையில் அதிலிருந்து பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பங்குச்சந்தைக்கு ஷாக்அப்ஸர்வர்களாகஇருப்பது சில்லரை முதலீட்டாளர்கள்தான் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறும் நிலையில் அதிலிருந்து பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பங்குச்சந்தைக்கு ஷாக்அப்ஸர்வர்களாகஇருப்பது சில்லரை முதலீட்டாளர்கள்தான் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க அந்நாட்டு பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தத் தொடங்கியது முதல் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை விற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டில் இதுவரை 1.69 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வெளியேறியுள்ளது. இதனால்தான் பங்குச்சந்தை பெரும் ஊசலாட்டுத்துடன் தினசரி இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய கார்ப்பரேட் அமைச்சகம் சார்பில் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. இதில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த அளவு சில்லரை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில்லரை வணிகர்கள் அதிக அளவில் பங்குச்சந்தையில் இருப்பது திடீர் அதிர்வுகளைத் தாங்கும் ஷாக்அப்ஸர்வர்கள் போன்றுள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறும்போது சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவும். அப்போது சந்தையைத் தாங்குவது சில்லரை முதலீ்ட்டாளர்கள்தான்.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 6 கோடி டீமேட் கணக்குள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகள், நிறுவனங்கள் தகுந்த முன்னேற்பாடுடன் இருந்து, டிஜிட்டல் முறையை செயல்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும். டிஜிட்டல்மயமாக்கும்போது, தேவையான பாதுகாப்புவசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
