இன்று முதல் புது 500 ரூபாய் .....!!!
கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் கருப்புப்பணத்தை ஒழிக்கும் முதல் நடவடிக்கையாக நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தற்போது புது இரண்டாயிரம் ரூபாய் மாட்டும் தற்போது புழக்கத்தில் இருப்பதால், அதற்கு சில்லறை பெறுவது கடினமாக உள்ளது.
இதனை தொடர்ந்து, தற்போது 500 ரூபாய் நோட்டுகள், அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் டெல்லி மற்றும் போபாலில் நேற்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இன்று, தமிழகம் மற்றும் மற்ற பகுதிகளில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் முதல் கட்டமாக 50 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக , அடுத்தகட்டமாக புதன் கிழமை 50 லட்சம் 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் வரும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
