புதிய 2,000 ரூபாய் அச்சடிப்பு எங்கே..?? பரபரப்பில் விமான நிலையம் .....!

நாட்டில் தற்போதுபுதியதாக அறிமுகம் செய்துள்ள புதிய இரண்டாயிரம் ரூபாய் ,மைசூரில் உள்ள அரசு அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டது.

அதாவது, மைசூரில் மண்டகள்ளி எனுமிடத்தில் உள்ள விமான நிலையத்தில் ஒரே ஒரு விமான ஓடுதளம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ,புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை மைசூரில் உள்ள ஆலையில் அச்சடிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த விவரம் நிதி அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான நிலையத்தில் இருந்துதான் ,அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதற்காக, கடந்த ஆறு மாத காலமாக, இந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.