Ambani Liverpool :ஐரோப்பிய கால்பந்தில் தடம்பதிக்கும் முகேஷ் அம்பானி ! Liverpool அணியை விலைக்கு வாங்க பேச்சு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஐரோப்பிய கால்பந்து உலகில் கால்பதிக்க உள்ளார். இதற்காக இங்கிலீஸ் கால்பந்து அணியான லிவர்பூல் அணியை விலைக்கு வாங்க பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Mukesh Ambani will offer for acquisition of Liverpool FC: Report

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஐரோப்பிய கால்பந்து உலகில் கால்பதிக்க உள்ளார். இதற்காக இங்கிலீஸ் கால்பந்து அணியான லிவர்பூல் அணியை விலைக்கு வாங்க பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தி மிரர் நாளேடு இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தாடைகள், அழைப்பிதழ் அச்சடித்து நாய்களுக்குத் திருமணம் செய்த உரிமையாளர்கள்: ஹரியானாவில் ஸ்வாரஸ்யம்

இங்கிலீஸ் ப்ரிமியர் லீக்கில் முக்கியமான அணியான லிவர்பூல் அணிக்கு தற்போது பென்வே ஸ்போர்ட்ஸ் குரூப்(எப்எஸ்ஜி) உரிமையாளராக இருந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு மெர்ஸிசைட் கிளப்பிடம் இருந்து எப்எஸ்ஜி குழுமம் லிவர்பூல் அணியை விலைக்கு வாங்கியது.

Mukesh Ambani will offer for acquisition of Liverpool FC: Report

இந்நிலையில் தற்போது லிவர்பூல் அணியை விற்கும் முடிவில் எப்எஸ்ஜி இறங்கியுள்ள நிலையில் அதற்கு உதவியாக கோல்ட்மேன் சாஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனங்களை உதவிக்கு நியமித்துள்ளது.

லிவர்பூல் கால்பந்து அணியை 400 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு விற்க எப்எஸ்ஜி குழுமம் தீர்மானித்துள்ளது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்: ஆலோசிக்கப்படும் அம்சங்கள்?

இதற்கிடையே ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, லிவர்பூல் அணியை வாங்குவது குறித்து பேசியுள்ளார் என தி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் லிவர்பூல் அணியின் விவரங்கள், விலை உள்ளிட்டவற்றை விசாரித்துமுதல்கட்டப் பேச்சில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. ஆனாலும் இதை உறுதி செய்யவில்லை. 

எப்எஸ்ஜி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ லிவர்பூல் அணி உரிமையாளர்களில் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன, உரிமையாளர்கள் மாறப்போவது குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. லிவர்பூலில் பங்குகளை வாங்கும் மூன்றாம் தரப்பினர் விருப்பம் குறித்து எங்களுக்கு விண்ணப்பங்கள் வருகின்றன. சரியான நேரத்தில் நாங்கள் அது குறித்து பரிசீலிப்போம்” எனத் தெரிவித்துள்ளது.

Mukesh Ambani will offer for acquisition of Liverpool FC: Report

எப்எஸ்ஜி உரிமையாளர்  கீழ் லிவர்பூல் அணி இங்கிலிஷ் ப்ரீமியர் தொடரில் சிறப்பாக ஆடியது. கேப்டன் ஜூர்ஜென் க்ளீப் தலைமையில் ப்ரீமியர் லீக் பட்டம், சாம்பியன் லீக், கோபா அமெரிக்கா, கராபோ கோப்பை, ஐரோப்பிய சூப்பர் லீக் ஆகியவற்றை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

ரிலையன்ஸ் நிறுவனம் தவிர்த்து அமெரிக்கா மற்றும் வளைகுடாநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களும் லிவர்பூல் அணிக்காக வலைவிரித்து வருகிறார்கள். ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியையும், ஐஎஸ்எல் எனும் கால்பந்து தொடரையும் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது, இது தவிர அனைத்து இந்திய கால்பந்து கழகத்தின் வர்த்தகக் கூட்டாளியாகவும் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios