ரிலையன்சின் தலைமை பொறுப்புக்கு வந்த இஷா அம்பானி.. அடேங்கப்பா.! சொத்து மதிப்பு இவ்வளவா?
ரிலையன்ஸ் குழும சில்லறை வணிகத்தின் தலைமை பொறுப்புக்கு மகள் இஷா அம்பானியை நியமித்து முகேஷ் அம்பானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராக இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார். முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஏஜிஎம் (ஆண்டு பொதுக் கூட்டத்தில்) தலைவராக அறிமுகமான பிறகு பேசிய இஷா அம்பானி, ‘வாட்சப்பை பயன்படுத்தி ஆன்லைன் மளிகை ஆர்டர்களை வைப்பது மற்றும் பணம் செலுத்துவது குறித்து விளக்கமளித்தார். இந்த வணிகத்தின் நோக்கம், தயாரிப்புகளை உருவாக்கி வழங்குவது மற்றும் ஒவ்வொரு இந்தியரின் அன்றாடத் தேவைகளையும் தீர்ப்பதும், உயர்தர தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்குவதும் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு..நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
மேலும் இதுதவிர, ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்திய கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தத் தொடங்கும். ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்த ஆண்டு 2,500 ஸ்டோர்களைத் திறந்து, அதன் கடைகளின் எண்ணிக்கையை 15,000க்கு மேல் கொண்டு சென்றது, இது 42 மில்லியன் சதுர அடி பரப்பளவில் உள்ளது. யேல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான 30 வயதான இஷா, பிரமல் குழுமத்தின் அஜய் மற்றும் ஸ்வாதி பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலை மணந்தார்.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி,
ஆனந்த் அம்பானி. இதில் மூத்த பிள்ளைகளான ( டிவின்ஸ் ) ஆகாஷ் மற்றும் ஈஷா 2015 முதல் ரிலையன்ஸ் நிர்வாகப் பணியில் இருந்து வருகின்றனர், ஆனால் அனந்த் அம்பானிக்கு இப்போது தான் 27 வயதாகிறது. சமீபத்தில் தான் முக்கியமான வர்த்தகப் பிரிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இந்நிலையில் ஆனந்தை ரிலையன்ஸ் நிறுவனத்தில் எனர்ஜி பிசினஸ் லீடராக அறிமுகப்படுத்தினார்.ஆகாஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் ஜியோ தலைவர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கு அளித்ததுப் போலவே ரிலையன்ஸ் ரீடைல் பதவியை ஈஷா அம்பானிக்குக் கொடுத்தாலும், அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் தலைமை நிர்வாகப் பொறுப்பு முகேஷ் அம்பானி வகித்து வருகிறார்.
தற்போது இஷா அம்பானி வகித்து வரும் பதவிகள் பின்வருமாறு, ரிலையன்ஸ் ஜியோ - டைரக்டர் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் - டைரக்டர் ஜியோ பிளாட்பார்ம்ஸ் - டைரக்டர் ரிலையன்ஸ் பவுண்டேஷன் - டைரக்டர் ஜியோ இன்ஸ்டியூட் - டைரக்டர் ஆகியவை ஆகும். இவரின் சொத்து மதிப்பு 100 மில்லியன் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?