Asianet News TamilAsianet News Tamil

itr filing date: ஜூலை 31, கடைசிநாளில் 63.47 லட்சம் பேர் ஐடி ரிட்டன் தாக்கல்

வருமானவரி செலுத்துவோர் 2021-22ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டனைத் தாக்கல் செய்ய நேற்று(ஜூலை31)கடைசி நாள் என்பதால், ஒரே நாளில் 63.47 லட்சம் பேர் ஐடி ரிட்டன் தாக்கல் செய்தனர் என பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

More than 63.47 lakh ITRs for FY22 were submitted up till 10 p.m. on the final day.
Author
New Delhi, First Published Aug 1, 2022, 10:41 AM IST

வருமானவரி செலுத்துவோர் 2021-22ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டனைத் தாக்கல் செய்ய நேற்று(ஜூலை31)கடைசி நாள் என்பதால், ஒரே நாளில் 63.47 லட்சம் பேர் ஐடி ரிட்டன் தாக்கல் செய்தனர் என பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

எந்த எண்ணிக்கை இரவு 10 மணிவரை மட்டுமே, அதன்பின் 2 மணிநேரம் வரை அவகாசம் இருந்ததால், எண்ணிக்கை மேலும் அதிகரி்க்கலாம். வருமானவரித்துறை இன்னும் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.

More than 63.47 lakh ITRs for FY22 were submitted up till 10 p.m. on the final day.

itr filing date: ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் ஊதியமிருந்தாலும் ITR தாக்கல் செய்யணுமா? நன்மைகள் என்ன?

ஐடி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துவிட்டது.இதையடுத்து, கடைசி நாளான நேற்று ரிட்டன் தாக்கல் செய்ய கடும் நெருக்கடி எழுந்தது. ஜூலை 30ம் தேதிவரை 5.10 கோடிக்கும் அதிகமானோர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.

கடைசி நாளான நேற்று இரவு 10மணி வரை 64.47 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இதனால், ஐடி ரிட்டன் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 5.73 கோடியாக அதிகரிக்கும். ஐடி ரிட்டன் தாக்கல் நள்ளிரவுவரை சென்றது. ஒருவேளை நேற்று ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய முடியாதவர்கள், காலதாமதத்துக்கான கட்டணத்தைச் சேர்த்து செலுத்த வேண்டும்.

More than 63.47 lakh ITRs for FY22 were submitted up till 10 p.m. on the final day.

அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்

வருமான வரித்துறை ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ ஜூலை 31 இரவு 10 மணிவரை 63 லட்சத்து 47ஆயிரத்து 054 பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஓரு மணிநேரத்தில்மட்டும் 4 லட்சத்து 60  ஆயிரத்து 496 பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

2020-21ம் நிதியாண்டில் 2021, டிசம்பர் 31 வரை 5.89 கோடிபேர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தனர். ஐடி ரிட்டன் தாக்கல் செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேதம் எழுந்தால், orm@cpc.incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், என்ற 1800 103 0025  1800 419 0025 உதவி எண்ணிலும் தொடர் கொள்ளலாம் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலையின் பிடியில் ஆசிய நாடுகள்: தூண்டிலில் சிக்காத இந்தியா: இலங்கை நிலை மோசாகும்

More than 63.47 lakh ITRs for FY22 were submitted up till 10 p.m. on the final day.

வருமானவரித்துறை தகவலின்படி, ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போர் ரிட்டன் தாக்கல் தாமதம் ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் காலதாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், காலதாமதக் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும். வரி செலுத்தாமல் இருந்தால், அதற்கு ஒரு சதவதீம் வட்டியும் விதிக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios