சுகன்யா சம்ரிதி யோஜனா, பொதுவருங்கால வைப்புநிதி(பிபிஎப்), தேசிய ஓய்வூதிய திட்டம்(என்பிஎஸ்) ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்ச தொகை டெபாசிட் செய்யாவிட்டால்  செயலற்றதாகிவிடும் 

சுகன்யா சம்ரிதி யோஜனா, பொதுவருங்கால வைப்புநிதி(பிபிஎப்), தேசிய ஓய்வூதிய திட்டம்(என்பிஎஸ்) ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்ச தொகை டெபாசிட் செய்யாவிட்டால் காலாவாதியாகிவிடும். 

குறைந்தபட்ச டெபாசிட் செலுத்தும் கடைசித் தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. ஆதலால் இந்த 3 திட்டங்களிலும் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சதொகை செலுத்தி காலாவதியாவதை தவிர்க்கலாம்.

பொதுவருங்கால வைப்பு நிதி(பிபிஎப்)

பொதுவருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருப்பவர்கள். நடப்பு நிதியாண்டில் சூழல் காரணமாக பணம் ஏதும் செலுத்தாமல் இருந்தால், இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். நடப்பு நிதியாண்டு எந்தவிதமான தொகையையும் செலுத்தாமல் இருந்தால், ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும், நிலுவைத் தொகைக் கட்டமாகவும் ரூ.500 வசூலிக்கப்படும். ஆதலால், அபராதம், நிலுவைத் தொகையைத் தவிர்க்க குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவது சிறந்தது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் பிபிஎப் கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச தொகையை கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும் இல்லாவிட்டால்,அது கலாவதி என்ற பட்டியலில் சேர்க்கப்படும். கணக்கை உயிர்ப்பு செய்யாமல் பிபிஎப் கணக்குதாரர், தன்னுடைய கணக்கிலிருக்கும் பணத்தில்இருந்து கடனும் பெற முடியாது. காலாவதியான கணக்கு, கணக்குஎப்போது முதிர்வு அடையுமோ அதற்கு முன்தினம்தான் செயல்பாட்டுக்குவரும் ஆதலால், இந்தவாய்ப்பை தவறவிடாமல் 31ம்தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்திவிட வேண்டும்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் நடப்பு நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாமல் இருந்தால், மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம்.

நடப்பு நிதியாண்டில் ஒருமுறைகூட பணம் செலுத்தாமல் இருந்தால், கணக்கு கலாவதியாகிவிடும். மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டுவர ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும். 

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

பெண்குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் சுகன்யா சம்ரிதிசேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்ச தொகையை டெபாசிட் செய்தால்தான் கணக்கு உயிர்ப்புடன்இருக்கும். அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் எந்தத் தொகையையும் செலுத்தாமல்இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம்.

ஒருவேளை நடப்பு நிதியாண்டு எந்தத் தொகையும் செலுத்தாமல் இருந்து அடு்த்த நிதியாண்டு செலுத்தினால், ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும். ஆதலால், குறைந்தபட்சமாக ரூ.250 செலுத்துவதை மறக்க வேண்டாம்.