Asianet News TamilAsianet News Tamil

கம்மி பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்ஜி மோட்டார் - டீசர் வெளியீடு

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

MG Motor teases new EV likely to be called MG 4
Author
Tamil Nadu, First Published Feb 24, 2022, 9:34 AM IST

எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் வாகனம் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. டீசர் வீடியோவில் எம்ஜி 4 என அழைக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனம் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது.

இந்த் காரின் வெளிப்புறம் பிளாக் நிற ORVM-கள், பிளாக் நிற பிளாஸ்டிக் பாடி கிலாடிங், 17 இன்ச் அலாய் வீல்கள், கூர்மையான டெயில் லைட்கள், பிளாக் ரூஃப் இடம்பெற்று இருக்கிறது. இந்த காரின் நீளம் 4300mm அளவில் இருக்கும் என தெரிகிறது. "முற்றிலும் புதிய 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாக இருக்கிறது," என எம்ஜி மோட்டார்  டீசர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறது.

MG Motor teases new EV likely to be called MG 4

இந்த எலெக்ட்ரிக் கார் பிரிடிஷ் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. டீசர் வீடியோ எம்ஜி மோட்டார்ஸ் சமூக வலைதள பக்கங்களில் 'MGElectricforAll' எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த கார் அனைவராலும் வாங்கக் கூடிய வகையில் குறைந்த விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதாக எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே எம்ஜி ZS EV மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

எம்ஜி 4 மாடல் கியா EV 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அளவில் ஃபோக்ஸ்வேகன் ID.3 எலெக்ட்ரிக் கார் போன்று இருக்கும் என தெரிகிறது. எம்ஜி 4 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் 61.1 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் வழங்கப்படலாம். இதனுடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 154 ஹெச்.பி. திறன், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிகளில் எட்டிவிடும். இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios