தமிழ்நாட்டின் பணக்கார பெண் இவர்தான்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Radha Vembu Net Worth தமிழ்நாட்டின் பணக்கார பெண் ராதா வேம்பு பற்றியும், அவரது சொத்து மதிப்பு பற்றியும் தெரிந்து கொள்வோம்
சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோவின் இணை நிறுவனரான ராதா வேம்பு தமிழ்நாட்டின் மிகப் பெரிய பணக்காரப் பெண் ஆவார். ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரியான ராதா வேம்புவின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ.19,000 கோடி இருக்கும். M3M ஹுருன் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியல் 2023இன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 103 இடங்கள் முன்னேறி, மென்பொருள் மற்றும் சேவைத் துறையில் உலகின் இரண்டாவது பணக்கார பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
ராதா வேம்புவ்வின் சகோதரர் ஸ்ரீதர் வேம்பு ஜோஹோவில் வெறும் 5% பங்குகள் மட்டுமே வைத்திருக்கிறார். ஆனால், ராதா வேம்பு நிறுவனத்தில் 47.8% பங்குகளை வைத்திருக்கிறார். ராதா வேம்புவின் மற்றொரு சகோதரர் சேகரும் ஜோஹோவில் பங்குதாரராக இருக்கிறார். ஆனால், அவர் ஊடக வெளிச்சத்தில் இருந்து எப்போதும் விலகியே இருக்கிறார்.
கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருள் வழங்குநரான ஜோஹோ நிறுவனத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டில் ரூ.2700 கோடிக்கு மேல் லாபம் கிடைத்தது. ராதே வேம்புவின் மகத்தான சொத்து மதிப்புக்கு ஜோஹோ நிறுவனமே முதன்மையாக இருக்கிறது.
உறக்கத்தில் இன்று மீண்டும் எழுந்திரிக்கும் விக்ரம் லேண்டர், ரோவர்: இஸ்ரோ நம்பிக்கை!
ராதா வேம்பு 1972ஆம் ஆண்டி சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை சாம்பமூர்த்தி வேம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக பணியாற்றினார். சென்னை நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், ஆரம்பக் கல்வியை முடித்த அவர், சென்னை ஐஐடியில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை படித்தார். 1996 இல், ராதா வேம்பு உயர் கல்வியை படிக்கும்போது, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பிஎச்டி பட்டம் பெற்ற தனது சகோதரர் ஸ்ரீதர் வேம்புவுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் அட்வென்நெட் என இருந்து. பின்னர் ஜோஜோ என அந்த நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது.
மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் பல பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஜோஹோ நிறுவனம் உள்ளது. Zoho Mail என்ற மின்னஞ்சல் சேவையின் தயாரிப்பு மேலாளராக ராதா வேம்பு பணிபுரிகிறார்.
ஜானகி ஹைடெக் அக்ரோ பிரைவேட் லிமிடெட் எனும் அரசு சாரா விவசாய நிறுவனத்தின் இயக்குநராகவும் ராதா வேம்பு உள்ளார். ஹைலேண்ட் வேலி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் உள்ளார்.