மத்திய பட்ஜெட் :

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டின் பட்ஜெட்டில், அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கையை அளிப்பது. பட்ஜெட்டானது, நிதியமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் செலவு அமைச்சகங்கள் சம்மத்தப்பட்ட ஆலோசனை செயல்முறை மூலம் உருவாக்கப்படுகிறது

அமைச்சககளின் கோரிக்கை :

அமைச்சகங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, திட்டமிட்டுச் செலவு செய்வதற்கு நிதியமைச்சகம் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. நிதியமைச்சகத்தில் உள்ள பொருளாதாரத் தொடர்புகள் துறை பட்ஜெட் பிரிவானது, வரவு - செலவு திட்டத்தினை ஒருங்கிணைந்து தயாரிப்பதற்குக் காரணமாக உள்ளது.

பட்ஜெட் பிரிவானது, அனைத்து ஒள்றிய அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள், துறைகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அடுத்த ஆண்டின் மதிப்புகளின்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது.

விரிவான விவாதங்கள் :

அதன் பின்னர், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களது கோரிக்கைகளை அரசிற்கு அனுப்பும், பின்னர் அமைச்சகங்கள் மற்றும் நிதியமைச்சகத்திற்கு இடையே விரிவான விவாதங்கள் நடைபெறும். அதே சமயத்தில், பொருளாதாரத்துறை மற்றும் வருவாய் துறையானது, விவசாயிகள், வர்த்தகர்கள், அந்நிய நிதிநிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், சிவில் குழுக்கள் மற்றும் பங்குதாரர்களைச் சந்தித்துக் கேட்டறிந்த தங்கள் கருத்துக்களையும் முன்னின்று கூறவேண்டும்.

நிதிஅமைச்சர் :

பட்ஜெட்டிற்கு முந்திய கூட்டம் முடிவடைந்துவிட்டால், வரித் திட்டங்கள் சார்ந்த இறுதி முடிவுகள் நிதியமைச்சரால் எடுக்கப்படும். பின்னர், பிரதமர் முன்னிலையில் இந்தத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, வரவு-செலவு திட்டமானது நிலை நிறுத்தப்படும்.

சபாநாயகர்:

அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியினை ஒப்புக்கொண்ட பின் லோக்சபா செயலகத்தின் பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்குகிறார். பட்ஜெட்டின் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஒப்புதல் :

நிதியமைச்சர், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் தன்னுடைய 'அமைச்சரவை சுருக்கம்' மூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 'ஆண்டு நிதி அறிக்கை' மத்திய நிதி அமைச்சர் உரையாற்றிய பின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தினத்தன்று காலையில், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்த பின் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படுகிறது