இந்தியாவில் 90 கோடி மக்களில் பெரும்பகுதியினர் வேலைதேடுவதையே நிறுத்திவிட்டார்கள் அல்லது வேலையில்லாமல் இருக்கிறார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே வேலைபார்க்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 90 கோடி மக்களில் பெரும்பகுதியினர் வேலைதேடுவதையே நிறுத்திவிட்டார்கள் அல்லது வேலையில்லாமல் இருக்கிறார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே வேலைபார்க்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்பது ஒரு தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது

வேலைதேடுவது நிறுத்தம்

வேலை தேடியும் தகுதியான பணி கிடைக்கவில்லை என்ற அதிருப்தி, விரக்தி ஆகியவற்றால் வேலை தேடுவதையே லட்சக்கண்ககான இந்தியர்கள் குறிப்பாக பெண்கள் நிறுத்திவிட்டார்கள், அதிலும் பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்கள் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 46 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெண்களை எடுத்துக்கொண்டால் தொழிலாளர் பிரிவிலிருந்து 2.10 கோடி பேரைக் காணவில்லை. அதாவது 9 சதவீதம்பெண்கள் மட்டுமே தகுதியான வேலையில் உள்ளனர் அல்லது வேலை தேடுகிறார்கள்.

வேலை பார்க்கும் சட்டபூர்வ வயதுள்ள 90 கோடி மக்களில் பெரும்பகுதியினர் வேலைக்கு செல்லாமல் உள்ளனர், வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள். அதாவது அமெரிக்கா, ரஷ்யாவின் மக்கள் தொகைக்கு ஈடான மக்கள் வேலைக்கு செல்ல விரும்பாமல் உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலைக்குப் போட்டி

 இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் பெரும் சிக்கலானதாக இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் தொகையில் மூன்றில் இருபகுதி 15 முதல் 64 வயதுடையவர்களுக்கு வேலை அவசியம், இவர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. அரசாங்கத்தில் நிலையான இடத்தில் பணிக்கு அமர்வதற்கு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்றன.உயர்ந்த பொறியியல் நிறுவனங்களில் நுழைவதும் கடினமாக இருக்கிறது.

வேளாண்மை அல்லாத 90 கோடி வேலைவாய்ப்புகளை 2030ம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என்று மெக்கின்ஸி குளோபல் நிறுவனம் 2020ம் ஆண்டு தெரிவித்துள்ளது. இதற்கு ஆண்டுக்கு 8 சதவீதம் முதல் 8.5 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருக்க வேண்டும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் தொழிலாளர் சக்தி என்பது 44.5 கோடியிலிருந்து 43.50 கோடியாக கடந்த 6 ஆண்டுகளில் குறைந்துவிட்டது. தற்போது இந்தியாவில் 108.50 கோடி பேர் அதாவது 15 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே வேலையில் உள்ளனர்.

பெண்கள் நிலை

மகளிரைப் பொறுத்தவரை, ஏற்கெனவே குறைந்த அளவில்தான் பணியாற்றி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அதுவும் குறைந்துவிட்டது. 2016-17ம் ஆண்டில் 15சதவீதம் பெண்கள் வேலைக்காக எதிர்பார்த்திருந்தார்கள் அல்லது வேலைதேடினர். இது 2021-22ம் ஆண்டில் 9.2% குறைந்துவிட்டது. 

ஆண்களிடையே இந்த விகிதம் 74 சதவீதத்திலிருந்து 67 ஆகக் குறைந்துவிட்டது. பெரும்பாலும் கிராமப்புறங்களைவிட, நகர்ப்புறங்களில்தான் ஆண்கள் வேலைக்குச் செல்லாத அளவு அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 37.5 சதவீதத்திலிருந்து 44.7ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களி்ல 46.9 சதவீதத்திலிருந்து 41.4 சதவீதமாகவும் குறைந்துள்ளது.