ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைப்பு பிறகு ஜூலை 1 முதல் என்னென்ன மாற்றங்கள் நடக்கவுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சியும், நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சியும் இணையவுள்ளன. இந்த இணைப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. வீட்டு நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைந்த பிறகு பல விஷயங்கள் மாறவுள்ளன.
ஹெச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் கூறுகையில், ஜூன் 30ஆம் தேதி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாரியக் கூட்டம் நடைபெறும். அதன் பிறகு ஜூலை 1 முதல் இரு நிறுவனங்களும் ஒன்றாக மாறும். இந்த இணைப்பிற்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கியின் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்வோம்;
ஹெச்டிஎஃப்சி வங்கி முன்பை விட அதிக கடன்களை வழங்க முடியும்
இந்த இணைப்புக்கு பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் சேவை தொடர்ந்து கிடைக்கும். ஒரே கிளையில் கடன் முதல் வங்கிச் சேவை வரை அனைத்தையும் பெற முடியும். வங்கியின் ஒவ்வொரு கிளையிலும் வீட்டுக் கடன் வழங்கப்படலாம். இந்த இணைப்பிற்குப் பிறகு, வங்கியின் மூலதனம் முந்தையதை விட கணிசமாக அதிகரிக்கும். முன்பை விட அதிகமானோர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் கடன் பெற வாய்ப்புள்ளது.
HDFC வங்கியில் வைப்பு நிதி இருந்தால் பலனளிக்குமா?
ஹெச்டிஎஃப்சி வங்கியில் FD வைத்திருப்பவர்களின் வட்டி விகிதங்கள் மாறலாம். HDFC மற்றும் HDFC Bank-இன் வட்டி விகிதங்களில் வித்தியாசம் உள்ளது. ஹெச்டிஎஃப்சி-யை விட HDFC Bank-இல் FD வட்டி விகிதங்கள் குறைவு. HDFC 12 முதல் 120 மாதங்கள் வரையிலான FDகளுக்கு 6.56% முதல் 7.21% வரையிலான வட்டியை வழங்குகிறது. HDFC Bank 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 3 முதல் 7.25% வரை வட்டி. எனவே, இணைப்புக்கு பிறகு வைப்பு நிதியை புதிப்பிப்பவர்களுக்கு வட்டி விகிதங்கள் மாறுபடலாம்.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சிலிண்டர் விலை குறையுமா?
இணைப்பிற்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டின் நன்மைகள்
இந்த இணைப்பிற்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களும் தங்கள் வைப்புத்தொகையின் மீதான காப்பீட்டின் பலனைப் பெறுவார்கள். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் மூலம் வங்கி டெபாசிட் செய்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடுகளை வங்கிகள் வழங்குகின்றன.
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கான பலன்கள்
HDFC வங்கி மற்றும் HDFC ஃபைனான்ஸ் ஆகியவற்றின் இணைப்பு HDFC ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 2019க்குப் பிறகு அனைத்துக் கடன்களும் External Bench Mark Lending Rate (EBLR) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, இணைப்பிற்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி கடன் வட்டி விகிதங்கள் அடுத்த 6 மாதங்களில் EBLR அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை குறைப்பதன் பலனை வாடிக்கையாளர்களும் பெறுவார்கள். EBLR விகிதங்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்கிறது. எனவே, EBLR அடிப்படையிலான வட்டி விகிதங்கள் மிகவும் வெளிப்படையானவை.
இந்த இணைப்பால் பங்குதாரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
பங்குச் சந்தையில் ஹெச்டிஎஃப்சி ஹவுசிங் ஃபைனான்ஸ் வர்த்தகமானது, இணைப்பிற்குப் பிறகு ஜூலை 13ஆம் தேதி முதல் நிறுத்தப்படும். HDFC லிமிடெட் பங்குதாரர்களுக்கு HDFC வங்கியின் ஒவ்வொரு 25 பங்குகளுக்கும் 42 பங்குகள் வழங்கப்படும். அதாவது இந்த இணைப்பால் பங்குதாரர்கள் பயனடைவார்கள்.
