மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது XUV300 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அப்டேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மஹிந்திரா ஆட்டோமோடிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மஹிந்திரா நிறுவனத்தின் அதி நவீன எம் ஸ்டேலியன் சீரிஸ் பெட்ரோல் என்ஜின்கள் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை 1.2, 1.5 மற்றும் 2.0 லிட்டர் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 2 லிட்டர் என்ஜின் புதிய தார் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த என்ஜின் XUV700 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எம் ஸ்டேலியன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேம்பட்ட XUV300 மாடலில் வழங்கப்பட இருக்கிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்விலும் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் முற்றிலும் புது என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எம் ஸ்டேலியன் என்ஜின்கள் டைரக்ட் இன்ஜெக்‌ஷன், சிலிண்டர் ஹெட்கள் எக்சாஸ்ட் மனிஃபோல்டுகளில் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இவை சிறந்த செயல்திறன் வெளிப்படுத்துவதோடு அதிக மைலேஜ் வழங்குகின்றன. 

புதிய XUV300 மாடலில் வழங்கப்பட இருக்கும் 1.2 லிட்டர் எம் ஸ்டேலியன் T-GDI என்ஜின் 20 ஹெச்.பி. திறன், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. தற்போது KUV100 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர், 3 சிலிண்டர் எம் ஃபால்கன் MPFI என்ஜின் புதிய XUV300 ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்படலாம்.

இந்திய சந்தையில் மஹிந்திரா XUV300 மாடல் 2019 பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி 2023 துவக்கத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெளியிடுவது சரியான முடிவாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.