lic share price today :எல்ஐசி பங்கு விலை மோசமாக சரிந்து வருவது குறித்து கவலையும், அக்கறையும் கொள்கிறோம். ஆனால் இது தற்காலிக போக்குதான் என்று முதலீட்டாளர்களுக்குமத்திய அரசு ஆறுதல் தெரிவித்துள்ளது.
எல்ஐசி பங்கு விலை மோசமாக சரிந்து வருவது குறித்து கவலையும், அக்கறையும் கொள்கிறோம். ஆனால் இது தற்காலிக போக்குதான் என்று முதலீட்டாளர்களுக்குமத்திய அரசு ஆறுதல் தெரிவித்துள்ளது.
எல்ஐசியில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளில் 3.5சதவீதத்தை மட்டும் சந்தையில் விற்பனை செய்து ரூ.21ஆயிரம் கோடி நிதி திரட்டியது. இந்த பங்கு விலை ஒன்று ரூ.949 என்று நிர்ணயம் செய்யப்பட்டு லிஸ்டிங் செய்யப்படும்போது ர8 சதவீதம் குறைவாக ரூ.872 என நிர்ணயம் செய்யப்பட்டது.

அதிலிருந்து எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிவுடனே காணப்படுகிறது. பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு லாபமீட்டலாம் என்று எண்ணி பங்கு வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள் அனைவரும் கண்ணீர் விடுகிறார்கள்.
எல்ஐசி பங்கு பங்கு வர்த்தகத்தில் இதுவரை அதிகபட்சமாக ரூ.920 வரை விற்பனையாகியுள்ளது, குறைந்தபட்சமாக ரூ.720 வரை ஒரு பங்குவிலை சென்றது. வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் முடிந்தது. எல்ஐசி பங்கு விலை மேலும் சரிந்து ஒரு பங்கு ரூ.709.70க்கு விற்பனையானது.
ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயித்து 675 கோடியாகக் குறைந்தது.

ரூ.6 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.59 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டதை எண்ணி முதலீட்டாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள். மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள டாப்10 நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது
எல்ஐசி பங்கு விலை சரிவு குறித்து டிஐபிஏஎம் செயலாளர் துஹின் கந்தா பாண்டே நேற்று கூறுகையில் “ எல்ஐசி பங்கு சரிவை நினைத்து கவலையாக இருக்கிறது அதன் மீது அக்கறையாகவும் இருக்கிறோம். ஆனால், இந்த விலை சரிவு தற்காலிகமானதுதான் என்பதை முதலீட்டாளர்கள் புரி்ந்துகொள்ள வேண்டும்.

எல்ஐசியின் அடிப்படை விஷயங்களை மக்கள் புரிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். முதலீட்டாளர்கள் மீது எல்ஐசி நிர்வாகம் அக்கறையாக இருக்கிறது, பங்கு விலையை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஜூன் மாத இறுதியில் எல்ஐசி நிறுவனம் தனது உட்பொதிக்கப்பட்ட மதிப்பை வெளியிடுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் செபியிடம் தாக்கல் செய்த ஆவணத்தில் ரூ.5.91 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாத இறுதியில் என்ன மதிப்பு வரப்போகிறது என்பது எதிர்பார்ப்பாகஇருக்கிறது.
