Asianet News TamilAsianet News Tamil

lic Share : முதலுக்கே மோசம் வந்திருமா? வரலாற்று சரிவில் LIC சந்தை மதிப்பு : கண்ணீரில் முதலீட்டாளர்கள்

lic share price:எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு  லிஸ்டிங்கப்பட்ட பின் இதுவரை  இல்லாத வகையில் ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தது. இதனால், பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது.

lic share price : LIC hits new low since listing; market cap falls below Rs 5 trillion
Author
Mumbai, First Published Jun 6, 2022, 10:44 AM IST

lic share price:எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு  லிஸ்டிங்கப்பட்ட பின் இதுவரை  இல்லாத வகையில் ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தது. இதனால், பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது

கடந்த மாதம் 17ம்தேதி எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டதில் இருந்து ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சந்தை மதிப்பை இழந்துள்ளது.

lic share price : LIC hits new low since listing; market cap falls below Rs 5 trillion

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு வாங்கினால் லாபம் ஈட்டலாம் என்று நினைத்து வாங்கிய ஊழியர்கள், பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் போகும் நிலையைப் பார்த்து என்ன செய்வது எனத் தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்கள்.

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை நிலவரத்தில் 2 சதவீதம் சரிந்து ரூ.786.05க்கு விற்பனையாகிறது. சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டபின் பங்குவிலை முதல்முறையாக கடும் வீழ்ச்சி அடைந்து, சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது. 

மத்தியஅரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதப் பங்குகளை விற்பனை செய் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டியது. எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்தது.

lic share price : LIC hits new low since listing; market cap falls below Rs 5 trillion

சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு வங்கு ரூ.905 ஆகவும், பாலிசிதாரர்க்களுக்குரூ.889 விலையிலும் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதம், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.இறுதியாக எல்ஐசி நிறுவனத்தின் 31.6 கோடி பங்குகளில் ஒரு பங்கு ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, எல்ஐசி பங்குகள் கடந்தமாதம் 17ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதில் எல்ஐசி பங்கு விற்பனையை விலையை விட 8 சதவீதம் குறைவாக ஒரு பங்கு ரூ.867க்கு விற்பனை செய்யப்பட்டது. எல்ஐசி  பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. 

lic share price : LIC hits new low since listing; market cap falls below Rs 5 trillion

 அடுத்தடுத்த நாட்களில் எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயிரதத் 675 கோடியாகக் குறைந்தது. எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.80ஆயிரத்து 600 கோடி குறைந்தது. ஏறக்குறைய முதலீட்டாளர்களுக்கு ரூ.80ஆயிரத்துக்கும் அதிகமான கோடி இழப்பு ஏற்பட்டது. 

கடந்த வாரத்திலிருந்து எல்ஐசி பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், 6-வது நாளாக எல்ஐசி பங்கு 2சதவீதம் சரிந்தது. லிஸ்டிங் விலையைவிட மிகக் குறைவாக ஒரு பங்கு ரூ.786க்கு வீழ்ச்சி அடைந்தது. கடந்த மாதம் 17ம் தேதி லிஸ்டிங் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 8ச தவீதம் எல்ஐசி பங்கு விலை குறைந்துள்ளது. இன்றைய சரிவு, 17 சதவீதமாகக் குறைந்துள்ளது. 

lic share price : LIC hits new low since listing; market cap falls below Rs 5 trillion

பங்குச்சந்தை வல்லுநர்களைப் பொறுத்தவரை “ எல்ஐசி பங்கு முதலீட்டாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம். நீண்டகாலத்தில் நல்ல விலை கிடைக்கும், வளர்ச்சி இருக்கும், லாபம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios