LIC IPO: lic ipo allotment date : எல்ஐசி பங்குகள் விற்பனை முடிந்துள்ள நிலையில் பங்குகளை வாங்க விருப்ப விண்ணப்பம் அளித்தவர்களுக்கான ஒதுக்கீடு இன்று(மே12) நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசி பங்குகள் விற்பனை முடிந்துள்ள நிலையில் பங்குகளை வாங்க விருப்ப விண்ணப்பம் அளித்தவர்களுக்கான ஒதுக்கீடு இன்று(மே12) நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசி பங்குகளை வாங்க விருப்ப விண்ணப்பம் அளித்தவர்கள் தங்களுக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது, எவ்வாறு அறிவது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.

மத்தியஅரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதப் பங்குகளை விற்பனை செய்து, ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. ஒட்டுமொத்தமாக 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு 47 கோடியே, 83 லட்சத்து67ஆயிரத்து 10 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ரூ.21 ஆயிரம் நிதி திரட்ட மத்திய அரசு கணக்கிட்ட நிலையில் ரூ.43 ஆயிரத்து 933 கோடிக்கு விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளன. எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்தது.இதில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 6 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதாவது ரூ.12 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் விருப்ப விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 4.4 மடங்கு கூடுதலாக வந்துள்ளன. தனிநபர்கள் பிரிவில் அதாவது சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 2 மடங்கு, ஏறக்குறைய ரூ.12 ஆயிரத்து 450 கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன.

பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்பட்டது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்கப்பட்டது.

இந்நிலையில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு கூடுதலாக விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பங்கு ஒதுக்கீடு குலுக்கல் முறையில் இருக்கும் எனத் தெரிகிறது. இதன் அடிப்படையில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். பங்குகள் கிடைக்காத முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

பங்குகள் ஒதுக்கீடு குறித்து எவ்வாறு தெரிந்து கொள்வது. 

மும்பைப் பங்குச்சந்தை இணையதளத்தில் சென்று ஒரு முதலீட்டாளர்கள் தங்களுக்கான பங்கு ஒதுக்கீட்டை தெரிந்து கொள்ளலாம். 

1. இணையதளத்தில் சென்று ஈக்விட்டி டைப் என்ன என்பதை தெரிவு செய்ய வேண்டும், அதாவது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்பதை கிளிக் செய்ய வேண்டும்
2. விண்ணப்ப எண் அல்லது பான் எண் ஆகியவற்றை பதிவிட்டு, செக் பாக்ஸை டிக் செய்து, சேர்ச் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
3. அதன்பின் தங்களுக்கு எத்தனைப் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரம் தெரிய வரும்.

ஐபிஓ பதிவாளர் இணையதளத்தில் எவ்வாறு தெரிந்து கொள்வது

1. ஐபிஓ என்ன என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதாவது எல்ஐசி என்பதை டைப் செய்தோ அல்லது கிளிக் செய்ய வேண்டும்
2. விண்ணப்ப எண் அல்லது டிபிஐடி அல்லது கிளைன்ட் ஐடி அல்லது பான் எண்னை குறிப்பிட வேண்டும்
3. கேப்ட்சா கோடை டைப் செய்து, இறுதியாக சப்மிட் பட்டனை அழுத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்கு நிலவரம் அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்பது குறித்து தெரியவரும்

ஒரு வேளை பங்குகள் ஏதும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் நாளை(13ம்தேதி)க்குள் பணம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். ஒருவேளை பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் தெரியவந்தால், வரும் 16ம் தேதிக்குள் முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கில் பங்குகள் கிரெடிட் செய்யப்படும்.

வரும் 17ம் தேதி மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையி்ல எல்ஐசி முறைப்படி லிஸ்டிங் செய்யப்படும்.