மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் மக்களுக்கு விற்பனை செய்ய இருக்கிறது. இந்தப் பங்குகளை எவ்வாறு மக்கள், பாலிசிதாரர்கல் வாங்குவது, நடைமுறை என்ன, ஆகியவை குறித்த கேள்விகளும், பதில்களும்தரப்பட்டுள்ளன. 

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் மக்களுக்கு விற்பனை செய்ய இருக்கிறது. இந்தப் பங்குகளை எவ்வாறு மக்கள், பாலிசிதாரர்கல் வாங்குவது, நடைமுறை என்ன, ஆகியவை குறித்த கேள்விகளும், பதில்களும்தரப்பட்டுள்ளன. 

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை 100 சதவீதம் ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது.

இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. அதாவது எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையிலும், பாலிசிதாரர்களுக்கு 5 % வரையிலும் தள்ளுபடி தரப்படலாம் எனத் தெரிகிறது.

இந்தப் பங்குகளை எவ்வாறு வாங்கு குறித்து பாலிதாரர்கள் முதல் சாமானிய மக்கள் முதல் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அதுகுறித்த சந்தேகங்களும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன

எல்ஐசி பங்குகள் எப்போது விற்பனையாகிறது?

எல்ஐசி நிறுவனம் வரைவுஅறிக்கையை செபியிடம் தாக்கல் செய்துவிட்டதால், வரும் நாட்களில் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அதற்குரிய தேதியை அறிவிக்கும். அனைத்துப் பணிகளையும் எல்ஐசி முடிக்கும்பட்சத்தில் 2022, மார்ச் 31ம்தேதிக்குள் பங்கு விற்பனை இருக்கும்.

எல்ஐசி ஐபிஓ-வுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

எல்ஐசி பங்குகளை வாங்க விரும்புவோர் அல்லது பாலிசிதாரர்களுக்கு முதலில் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். எல்ஐசி ஐபிஓ மட்டுமல்ல எந்த ஐபிஓவிலும் பங்கேற்க டீமேட்கணக்குஅவசியம். பங்குகள் விற்பனையை டிஜிட்டல்முறையில் செய்வதுதான் டீமேட்கணக்கு. டீமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை வங்கி கணக்கு தொடங்கலாம்.

எல்ஐசி ஐபிஓவின் சந்தை மதிப்பு எவ்வளவு இருக்கும்?

எல்ஐசி பங்கின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ.5.39லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22 லட்சம் கோடியாகவும், இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக எல்ஐசி இருக்கும். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு கூட ரூ.16 லட்சம் கோடிதான்.

எல்ஐசி ஐபிஓபின் முகமதிப்பு எவ்வளவு?

எல்ஐசி வரைவுஅறிக்கையின்படி ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 ஆகநிர்ணயி்க்கப்பட்டுள்ளது. 31.62 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

பங்கின் விலை எந்த அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது?

பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்படி, ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1693 முதல் ரூ.2,962 வரை செல்லலாம்.

எல்ஐசி ஐபிஓவுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் எல்ஐசி ஐபிஓவுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும், மொத்த பங்குகளில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பாலிசியுடன், பான்கார்டை பாலிசிதாரர்கள் இணைத்திருப்பது அவசியம். 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்குஒதுக்கப்படலாம்

எல்ஐசி ஊழியர்களுக்கு ஏதேனும் தள்ளுபடி பங்கு விற்பனையில் உண்டா?

எல்ஐசி ஊழியர்களுக்கு 5 சதவீத பங்குகள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, இவை 5 % தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எல்ஐசி சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

எல்ஐசி ஐபிஓ லாபகரமானதா?

எல்ஐசி ஐபிஓவுக்குள் முதலீடு செய்யும் முன் முதலீட்டாளர்கள் தீவிரமாக ஆலோசித்து முடிவுஎடுப்பார்கள். சந்தையின்நிலவரம், ஊசலாட்டம், சூழல் ஆகியவற்றை கணித்து முதலீடு செய்வார்கள். எல்ஐசியில் 29 கோடி பாலிசிதாரர்கள் இருப்பதால், ஐபிஓ விற்பனையும், அதனால் கிடைக்கும் லாபமும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்