10 ஆண்டுகளில் ரூ.735 கோடி! இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகி யார் தெரியுமா?

இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் பெண் உயரதிகாரியாக காவேரி கலாநிதி உள்ளார்

kaveri and kalanithi maran india's highest paid entrepreneur couple get salary rs 15000 crores in 10 years

தமிழகத்தை பொறுத்தவரை மாறன் சகோதரர்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். முன்னாள் மத்திய அமைச்சர் முரொசலி மாறனின் மகன்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன். தயாநிதி மாறன் தற்போது மக்களவை எம்.பியாக உள்ளார். அவரின் சகோதரர் கலாநிதி மாறன் சன் டிவியின் செயல் தலைவராக இருக்கிறார். 1990களின் முற்பகுதியில் மாறன் சகோதரர்கள் SUN டிவி நெட்வொர்க்கை நிறுவினர். ஆரம்பம் முதலே தொலைக்காட்சி துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சன் குழுமத்தின் செயல் தலைவர் கலாநிதி மாறன். இவரது மனைவி காவேரி கலாநிதி நிர்வாக இயக்குநராக உள்ளார். அவரின் குடும்பம் அந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 75 சதவீத பங்குகளை வைத்துள்ளது. நிறுவன முதலீட்டாளர்கள் வெறும் 12 சதவீதத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகிகள் ஆவர். 2012 மற்றும் 2021 க்கு இடையில், 1470 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர். ஊதியத்தில் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அடங்கும். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகி காவேரி கலாநதி மாறன் தான். 2021 நிதியாண்டில், கலாநிதி மாறன் 87.50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். காவேரி கலாநிதி சமமான தொகையை சம்பளமாக பெற்றார். 

இதன் மூலம் இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் பெண் உயரதிகாரியாக காவேரி கலாநிதி உள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 735 கோடிய சம்பளமாக பெற்றுள்ளார். அதாவது ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.6.1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஏப்ரல் 1, 2019 முதல் இயக்குநராகவும், நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்ட காவியா கலாநிதி மாறன், நிர்வாக ஊதியமாக ரூ.1.09 கோடி பெற்றார். 2021 நிதியாண்டில் மாறன்களின் சம்பளம் தலா 57 கோடி ரூபாயாகவும், 2021 நிதியாண்டில் தலா 87.50 கோடி ரூபாயாகவும் இருந்தது.

காவேரி கலாநிதி யார்?

காவேரி கலாநிதி கர்நாடக கூர்க்கில் பிறந்தவர். இவர் ஜம்மதா ஏ. பெல்லியப்பா (பொல்லி) மற்றும் நீனா ஆகியோரின் மகள் ஆவார். சென்னை, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்ற காவேரி 1991ல் கலாநிதி மாறனை திருமணம் செய்து கொண்டார். காவேரி கலாநிதி சேனல்கள் மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எனவே அவருக்கு சன் குழுமத்தில் முக்கிய பொறுப்பை வழங்கினார் கலாநிதி. 

1993-ல் தொடங்கப்பட்ட சன் டிவி நெட்வொர்க் 33 சேனல்களைக் கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பங்களா மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்களை இயக்கும் சன் டிவியில் மாறன் குடும்பம் 75 சதவீத பங்குகளை வைத்துள்ளது. மேலும் FM வானொலி நிலையங்களைக் கொண்டுள்ளது. தவிர ஐபிஎல்இந்தியன் பிரீமியர் லீக்கின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் உரிமையையும், OTT தளமான Sun NXTயையும் கொண்டுள்ளது.

சன் டிவி 2022 காலாண்டு முடிவுகள்

சன் டிவி நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 35.32 சதவீதம் உயர்ந்து ரூ.493.99 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ரூ.365.03 கோடி வரிக்குப் பிந்தைய லாபம் ஈட்டியுள்ளதாக, அந்நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஜூன் காலாண்டில் சன் டிவியின் செயல்பாடுகள் மூலம் வருவாய் 48.88 சதவீதம் அதிகரித்து ரூ.1,219.14 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.818.87 கோடியாக இருந்தது. ஜூன் 2022 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் கிட்டத்தட்ட 78 சதவீதம் உயர்ந்து ரூ.660.80 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு ரூ. 30 லட்சம்.. ரத்தன் டாடா குழுமத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழர்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios