தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று  இடங்களில் புதிய 3 ஷோ ரூம்கள் திறந்து தங்களது நிறுவனத்தை விரிவுப்படுத்தி வருகிறது. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் 

அதன் படி இன்று, சென்னை தி நகரில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை விளம்பர தூதரும் நடிகையுமான  கஜோல் தேவ்கன் திறந்து வைத்து புதிய புதிய மாடல் நகைகளை அறிமுகம் செய்தார். உடன் நடிகர் பிரஷாந்த் மற்றும்  அவருடைய தந்தையும், நடிகருமான தியாகராஜனும் கலந்துக்கொண்டார். 

இது குறித்து நிறுவனர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவிக்கும் போது, 

"தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு எனது நன்றி. எங்களின் வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவே, மேலும் பல ஷோரூம்களை நாங்கள் விரிவுபடுத்திட காரணமாக உள்ளது" என தெரிவித்தார்.

பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கான் குறிப்பிடும்போது,

"திறப்பு விழாவிற்கு அழைத்து இருப்பது எனக்கு அளிக்கப்பட்ட மரியாதை. அதையும் தாண்டி இந்த ஆண்டின் அக்ஷய திருதியை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்துவதில் நான் பெருமிதம் அடைகிறேன். மேலும் ஆயிரக்கணக்கான ஆபரண  பிரியர்களையும் ரசிகர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

இந்த புதிய கிளையின் சிறப்பம்சம் என்னவென்றால், திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு பர்சேஸ்சுக்கும் வீட்டு உபயோக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது ஜோய் ஆலுக்காஸ். அதுமட்டுமல்லாமல், இந்த கடையில் வாங்கும் நகைகளுக்கு 1 வருட இன்சூரன்ஸ், ஆயுட்கால பராமரிப்பு என பல சலுகைகளை வாரி வழங்குகிறது ஜோய் ஆலுக்காஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையில் நகைகள் வாங்க மக்கள் அதிக ஆர்வமுடன் தி நகருக்கு வந்துள்ளனர். அதற்கு மற்றொரு காரணம், மக்களை கவரும் வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளனர் என்பதும் கூட...

2020 ஆம் ஆண்டுக்குள் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு மட்டும் 200 ஷோரூம்கள் இருக்கும் என்றும், அதற்கான அனைத்து விரிவாக்க பணிகளையும் திட்டமிட்டு வருவதாகவும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் தற்போது 8 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் நிறுவனர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்து உள்ளார்.

"

அது மட்டுமல்லாமல், உலகின் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.