Google Cloud சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப் கோளாறால், Gmail, Snapchat, Spotify, Discord உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் முடங்கின. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகின. சில மணி நேர முடக்கத்திற்கு் பிறகு, Google Cloud சேவைகள் மீட்டெடுக்கப்பட்டன.
உலகம் முழுவதும் முடங்கிய இணைய சேவை
ஒரு சேவை நிறுவனத்தின் சில மணிநேரம் முடக்கம் உலகலாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாட்டை அப்படியே முடக்கிப்போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.வியாழக்கிழமை, ஜூன் 12 அன்று, உலகம் முழுவதும் பிரபலமான ஆன்லைன் சேவைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு காரணமாக, Google Cloud சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு எனத் தெரிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் புகார்
இந்த தடைகள் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணி முதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. Gmail, Google Search, Google Maps, Discord, Spotify, Twitch, Snapchat மற்றும் Nintendo Switch Online போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக இந்தியாவில் மட்டும் 11,000க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.அமெரிக்காவில் புகார்களின் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது. Google சேவைகள் மட்டுமின்றி, அவற்றின் மேல் சார்ந்த மூன்றாம் தரப்பு சேவைகள் (Character.ai, Rocket League, Pokémon Trading Card Game, Claude AI போன்றவை) மற்றும் Cloudflare, Shopify போன்ற முக்கிய இணைய ஸ்ட்ரக்சர்களும் பாதிக்கப்பட்டன.
காரணம் Google Cloud
Cloudflare சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “இது Google Cloud-ல் ஏற்பட்ட தடையே என்றும் Cloudflare உடன் தொடர்புடைய சில சேவைகள் மட்டுமே பாதிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது. Google Cloud இன்ஜினியர்கள் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 1:46 மணியில் தொழல்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்யத் தொடங்கினர். பெரும்பாலான இடங்களில் சேவைகள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்கின.
முடிவுக்கு வந்த கோளாறு
இதனை தொடர்ந்து காலை 6:27 மணிக்கு Google Cloud வெளியிட்ட செய்தியில், எல்லா சேவைகளும் தற்போது மீண்டும் இயல்பான நிலைக்கு வந்துவிட்டன என தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சம்பவம், இணையம் ஒரு சில முக்கிய சேவை வழங்குநர்களின் மேல் எந்த அளவு சார்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. Google Meet, Gmail போன்ற முக்கிய பணிச்சேவைகள் முடங்கியதால், பணிநேரத்தில் பாதிக்கப்பட்ட பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர். Shopify, DoorDash, Equifax, Gemini, Calendly, Marvel, MLB.tv போன்றனவும் பாதிக்கப்பட்டன.பிரச்சினையை சரிசெய்த தனது பயனாளிகளுக்கு நன்றி தெரிவித்தத Google இது தொடர்பாக விரைவில் முழுமையான விசாரணை அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
