Asianet News TamilAsianet News Tamil

எகிறி குதித்த இந்திய பங்குச் சந்தை; வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ், நிப்டி!!!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 71,800 புள்ளிகளை தொட்டது. வரலாற்றில் இல்லாத உச்சத்தை இன்று தொட்டு இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Indian Stock Exchange: Sensex rallies 400 points, Nifty tops 21,550!!
Author
First Published Dec 20, 2023, 10:57 AM IST

இந்திய பங்குச் சந்தை இன்று பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸ் வர்த்தகம் 400 புள்ளிகள் அதிகரித்து 71,800 புள்ளிகளை தொட்டது. 50 வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தை 21,550 புள்ளிகளை தொட்டது. குறிப்பாக சென்செக்சில் இன்று டிசிஎஸ், இன்போசிஸ், பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ், என்டிபிசி, விப்ரோ, டெக் மகேந்திரா ஆகிய பங்குகளை ஏற்றம் காணப்பட்டது. ஆக்சிஸ் பாங்க், எம் அண்டு எம், டாடா ஸ்டீல், சன் பார்மா, மாருதி சூசிகி, கோல் இந்தியா, பாரதி ஏர்டெல் ஆகியவற்றின் பங்கு மதிப்பு குறைந்து காணப்பட்டது. 

அமெரிக்க பங்கு வர்த்தகம் உச்சத்தில் இருப்பதால், இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், அமெரிக்காவில் விடுமுறை விடப்படுகிறது. இதனால் மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என்பதால் அமெரிக்க பங்குச் சந்தை ஏறுமுகத்தில் உள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ரூபாய் அதிகரிப்பு; மத்திய அரசு எடுத்த முடிவுகளால் அதிரடி மாற்றம்!

மேலும் அமெரிக்க பத்திரங்களை வாங்குவதில் தொய்வு ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு இந்த முதலீடு மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

DOMS Industries Ltd மற்றும் India Shelter Finance Corporation Ltd ஆகிய இரண்டு பங்குகள் அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில்  DOMS Industries Ltd பங்கு மதிப்பு ரூ. 606.35 உயர்ந்து ரூ.1396.35 ஆக உயர்ந்து இருந்தது. India Shelter Finance Corporation Ltd பங்கு மதிப்பு ரூ. 80.25 ஆக உயர்ந்து ரூ. 573.25 ஆக இருந்தது. 

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (புதன்கிழமை) உயர்ந்து காணப்பட்டது. ஆசிய பங்குச் சந்தைகள் மட்டுமின்றி இந்திய பங்குச் சந்தையும் சிறப்பாக செயல்பட்டதே இதற்குக் காரணம். ஆனால், அதேசமயம் உள்ளூர் எண்ணெய் நிறுவனங்கள் டாலர் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

Today Gold Rate in Chennai: விடாமல் ஜெட் வேகத்தில் அடிச்சு தூக்கும் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Follow Us:
Download App:
  • android
  • ios