இந்திய பங்குச் சந்தை இன்றும் சரிவை சந்தித்தது, நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தன. உலகளாவிய சந்தை நிலவரம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைப்பு ஆகியவை சரிவுக்கு காரணமாயின.
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இன்றும் சரிந்து காணப்பட்டது. முக்கிய குறியீடுகள் தொடர்ந்து இழப்புகளை சந்தித்தன. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் கடந்த வாரம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவைச் சந்தித்தன. பலவீனமான உலகளாவிய சந்தை நிலவரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீட்டளர்கள் ( FII)தங்களது முதலீடுகளை விற்று வெளியேறுதல் போன்ற காரணங்களால் சென்செக்ஸ் சரிந்தது.
இன்றைய வர்த்தகம் 400 புள்ளிகள் என்ற நம்பிக்கையுடன் துவங்கியது. ஆனால் விரைவாக வீழ்ச்சியும் காணப்பட்டது. நண்பகலில் சென்செக்ஸ் 73,222.26 என்ற அளவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகம் செய்து வருகிறது. அதாவது வெறும் 35 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.
நிஃப்டி 50 வர்த்தகம் இன்று 4,082.8 சரிவுடன் துவங்கியது. அதன் சாதனை அளவான 26,277.35-ல் இருந்து சரிந்தது. இன்று நண்பகல் நிஃப்டி வர்த்தகம் 22,113.45 என்ற புள்ளி அளவில் இருந்தது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் ஆசிய பங்குச் சந்தைகள் உயர்ந்தன. வெள்ளிக்கிழமை, அமெரிக்க சந்தைகள் வலுவான வர்த்தகத்தைக் கண்டன.
மார்ச் 31-க்குள் இதை செய்து முடிங்க.. இல்லைனா உங்களுக்கு அபராதம் தான்!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு 6.2% -ல் எதிர்பார்த்தபடி இருப்பதால், சந்தை எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான வாகன விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்:
எஸ்கார்ட்ஸ் குபோடா, எம்&எம், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார், ஐஷர் மோட்டார்ஸ், ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட், என்டிபிசி, ரெயில்டெல், என்சிசி, மசகான் டாக், டால்மியா பாரத், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, வோல்டாஸ், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மேன்கைண்ட் பார்மா, ஐஆர்எஃப்சி, எக்ஸிகாம் ஆகியவை இன்று கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பங்குகளாகும்.
சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டிய பங்குகள்
சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் அல்ட்ராடெக் சிமென்ட் (2.95%), பாரதி ஏர்டெல் (1.93%), இன்ஃபோசிஸ் (1.55%), எம்&எம் (1.58%) ஆகியவை அடங்கும். சென்செக்ஸில் அதிக நஷ்டமடைந்த பங்குகளில் ரிலையன்ஸ் (-2.85%), பஜாஜ் ஃபின்சர்வ் (-1.83%). இண்டஸ்இண்ட் வங்கி (-1.65%), எச்டிஎஃப்சி வங்கி (-1.39%). ரிலையன்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், எச்யுஎல், டைட்டன் கம்பெனி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஐடிசி ஆகியவை சென்செக்ஸில் 52 வாரக் குறைந்த அளவை எட்டிய பங்குகளாக பதிவு செய்துள்ளன.
TVS மோட்டார் பங்கு விலை உயர்வு; விற்பனை அதிகரிப்பு காரணமா?
நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய பங்குகள்:
நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் பாரத் எலெக் (4.14%), அல்ட்ராடெக் சிமென்ட் (3.03%), ஐஷர் மோட்டார்ஸ் (3.09%), விப்ரோ (3.03%) ஆகியவை அடங்கும். நிஃப்டியில் அதிக நஷ்டமடைந்த பங்குகளில் கோல் இந்தியா (-3.01%), ரிலையன்ஸ் (-2.88%), பஜாஜ் ஃபின்சர்வ் (-1.73%), எச்டிஎஃப்சி வங்கி (-1.61%) ஆகியவை அடங்கும். ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், HUL, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ONGC, ITC, SBI, டாடா மோட்டார்ஸ், BPCL ஆகியவை நிஃப்டியில் 52 வாரக் குறைந்த அளவை எட்டிய பங்குகள். பரந்த சந்தையில், BSE மிட்கேப் குறியீடு 0.10% சரிவில் வர்த்தகம் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் BSE ஸ்மால்கேப் குறியீடு முந்தைய முடிவை விட 1.30% சரிவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
