Indian Overseas Bank : repo rate: ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தையதையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ரெப்போ ரேட் அடிப்படையில் கடனுக்கான வட்டி வீதத்தை 7.25 சதவீதமாகஉயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தையதையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ரெப்போ ரேட் அடிப்படையில் கடனுக்கான வட்டி வீதத்தை 7.25 சதவீதமாகஉயர்த்தியுள்ளது.இந்த புதிய வட்டிவீத உயர்வு இன்று(10ம்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ ரேட் வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி 4.40 என அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பந்தன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா,பஞ்சாப் நேஷனல்வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்தின. இப்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளன.

இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “ எங்களின் வங்கி ரெப்போ ரேட்டுடன் தொடர்புடைய கடனுக்கான வட்டி வீதத்தை 7.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 4.40 ரெப்போ ரேட்+2.85 சதவீதம் என 7.25 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இது மே 10ம் தேதி(இன்று) முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 30 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இந்த வட்டிவீத உயர்வு 9ம் தேதி முதல் அமலாகியுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி 6.7 சதவீதமாக முன்பு இருந்தது. இனிமேல் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி எம்எல்சிஆர்அடிப்படையிலான வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி எல்எல்சிஆர் புள்ளிகளை உயர்த்தியுள்ளதையடுத்து, வீ்ட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி உயரும். கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணமும் அதிகரி்க்கும். இதற்கு முன் ஹெச்டிஎப்சி எம்எல்சிஆர் 6.9 சதவீதமாக இருந்தது, 25 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, இனி 7.15 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தி 8.10 சதவீதமாக அதிகரித்தது. பேங்ஆஃப் பரோடா வங்கி 6.90 சதவீதமாகவும் உயர்த்தியது. இதுதவிர பந்தன்வங்கி, கோடக் மகிந்திராவங்கி, ஜனா சிறு நிதி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷநல் வங்கிகள் சில்லரை வர்த்தகர்களுக்கு டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
