india inflation : கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்விலை உயர்வு ஆகியவை சேர்ந்து, நாடுமுழுவதும் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவு மக்களையும் வாட்டி வதைக்கிறது. குடும்பப் பெண்கள் தங்களின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், பட்ஜெட்டை மீறும் செலவுகளால் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்விலை உயர்வு ஆகியவை சேர்ந்து, நாடுமுழுவதும் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவு மக்களையும் வாட்டி வதைக்கிறது. குடும்பப் பெண்கள் தங்களின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், பட்ஜெட்டை மீறும் செலவுகளால் கண்ணீர் வடிக்கிறார்கள்.

லிட்டருக்கு ரூ.10 உயர்வு
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால், அனைத்துக்கும் சேர்த்து வைத்து கடந்த மாதம் 22ம் தேதியிலிருந்து இதுவரை பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு சராசரியாக ரூ.10 உயர்த்தப்பட்டுவிட்டது.
அதுமட்டுமல்லாமல் எல்பிஜி சிலிண்டர் விலையும் அதிகரித்து ஒரு சிலிண்டர் விலை அனைத்து செலவுகளுடன் சேர்க்கும் போது ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடுகிறது. செலவுகள் உயர்ந்த அளவுக்கு வருமானம் உயரவில்லை. சேமிக்கும் அளவு குறைந்து வருகிறது என மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

பட்ஜெட்டை மீறுகிறது
பஞ்சாப்பின் பாக்வாராவைச் சேர்ந்த இல்லத்தரசி அனுதீப் கவுர் கோரயா செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது வாழ்க்கை வாழ்வதை கடினமாக்குகிறது. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1000 எட்டிவிட்டது. மற்ற பொருட்களான காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த ஓம்பால் சிங் ஆட்டோ ஸ்டோர் வைத்துள்ளார். அவர் கூறுகையில் “ தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி உயர்வு சிறு வணிகர்கள், சிறு வர்த்கர்களின் வியாபாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது” எனத் தெரிவித்தார்

சேமிப்பு கரைகிறது
போபாலைச் சேர்ந்த பால்வியாபாரி காலு ராம் கூறுகையில் “ பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வதால் என்னுடைய சேமிப்பு கரைந்துவிட்டது. தினசரி நான் வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றச் செல்ல வேண்டும். பெட்ரோலுக்காக தினசரி ரூ.160 செலவு செய்கிறேன். இதற்கு முன் ரூ.100 செலவு செய்தேன். பெட்ரோல் விலை ஏற்றத்தால் என்னுடைய சேமிப்பு குறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
கேரளாவின் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த மீன் வியாபாரி அப்துல்ரஹ்மான் கூறுகையில் “ புதியப்பா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பெருமனாவரை 23 கி.மீ தொலைவு சென்று மீன் வாங்க வேண்டும். தினசரி பெட்ரோலுக்காக ரூ.100 செலவிடுகிறேன். இது தவிர நான் வியாபாரத்துக்காச் செல்லும்போது பெட்ரோல் செலவு என சேர்த்து மொத்தம் ரூ.250 செலவாகிறது. முன்பு எனக்கு ரூ.150 மட்டுமே செலவானது” எனத் தெரிவித்தார்

அத்தியாவசியச் செலவைக் குறைக்கிறோம்
சண்டிகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பால்தேவ் சந்த் கூறுகையில் “ பொருட்களின் விலைவாசி உயர்வு குடும்பத்தின் பட்ஜெட்டை பாதித்துவிட்டது. என்னுடைய ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட பகுதி மருந்துகளுக்கு செலவாகிறது, என்னுடைய மனைவிக்கு வழங்கிட வேண்டும். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பால், எங்களின் அத்தியாவசிய செலவுகளைக் கூட குறைக்க வேண்டியதிருக்கிறது” எனத் தெரிவித்தார்
டெல்லி மயூர் விஹாரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி பிரதீப் குஷ்வாலா கூறுகையில் “ பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வேறு வழியின்றி காய்கறிகளின் விலையையும் நான் உயர்த்திதான் மக்களுக்கு விற்க வேண்டியதிருக்கிறது. போக்குவரத்து செலவு மட்டும் 15 சதவீதம் ஆகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், காய்கறிகளின் விலையைும் நான் குறைப்பேன்” எனத் தெரிவித்தார்

போராட்டம்
டெல்லி ஆட்டோஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திர சோனி கூறுகையில் “ சிஎன்ஜி வாயு கிலோ ரூ.69 விற்பனையாகிறது. இதை அரசு ரூ.35 மானியமாக வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். இல்லாவிட்டால் வரும் 18ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்
விலையை உயர்த்த முடியவில்லை
பெங்களூருவில் சாலைஓரத்தில் உணவுக்கடை வைத்திருக்கும் வயதான தம்பதி கூறுகையில் “ சமையல் எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை உயர்வு எங்களை கடுமையாகப் பாதிக்கிறது. விலைவாசியை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறோம். இந்த நாட்களில் நாம் லாபத்தை அடைய முடியாது” எனத் தெரிவித்தார்
