india inflation : கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 6.35 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 6.35 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

6 % மேல் அதிகரிக்கும்

மார்ச் மாதத்துக்கான பணவீக்க புள்ளிவிவரங்கள் நாளை பிற்பகலில் வெளியாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் பணவீக்க உச்சவரபும், கட்டுப்படுத்தும் அளவு என்பது 6 சதவீதம்தான். ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் தொடர்ந்து 2 மாதங்களாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்துள்ளது. மார்ச் மாதத்திலும் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கலாம். 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்த நிதிக்கொள்கையில் முடிவு எடுக்க வேண்டிய ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தவில்லை. அதேசமயம், இந்த ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று மட்டும் சூசகமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துவிட்டா்.

நெருக்கடி

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் தொடர்ந்து வட்டிவீதத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு ரிசர்வ்வங்கி தள்ளப்படும்.

ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனத்தின் 48 பொருளாதார நிபுணர்கள் கணிப்பின்படி, மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 6 சதவீதத்தைக் கடந்து 6.35 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

16 மாதங்களில் அதிகபட்சம்

கடந்த பிப்ரவரி மாதம் 6.07 சதவீதமாக அதிகரித்தது. ஒருவேளை 6.35 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்தால், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப்பின் பணவீக்கம் இந்த அளவு உயர்வது இதுதான் அதிகபட்சமாகும்.

மார்ச் மாதத்தில் பணவீக்கம் என்பது 6.06 முதல் 6.50 வரை இருக்கும் என்று ராய்டர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இரு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கும் கீழ் வைத்திருக்கும் அளவைவிட அதிகமாகும். தொடர்ந்து 3வது முறையாக அதிகரிக்கும்.

ஒருவேளை 6 சதவீதத்துக்கும் மேல் பணவீக்கம் அதிகரி்க்கும்பட்சத்தில் வரும் ஜூன் மாதத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை. அப்போதுதான் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

சிட்டி வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் சாமிரன் சக்கரவர்த்தி கூறுகையில் “ மார்ச் மாதத்தில் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களிலும் பணவீக்கம் இதைவிட அதிகரி்க்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞை. குறிப்பாக உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் அதிகரிக்கும். தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும்பட்சத்தில், அதைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்துவதைத் தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்தார்