கருப்பு பணத்தை, வெள்ளையாக்கும் முயற்சி.....!! ஒரே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி இருமடங்கு அதிகரிப்பு....!!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், நாட்டின் தங்கம் இறக்குமதி இருமடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசம் கொடுக்கபட்டுள்ளதாகவும் , தங்கம், பெட்ரோல் வாங்கவும், வரிகள் செலுத்தவும் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில், கருப்யு பணத்தை வெள்ளையாக்க, பெரும்பாலானோர் தங்கத்தை வாங்கி குவித்துள்ளனர்.

இந்நிலையில், , பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசம் இருப்பதால், மேலும் தங்கத்தின் விற்பனையில் சூடு பிடிக்ககூடும் என தெரிகிறது.

இதனை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், நவம்பர் மாதத்தின் 1ம் தேதி தொடங்கி, 14ம் தேதி வரையான காலத்தில் மட்டும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 30 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மேன்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு தங்கத்தின் விலை கூடுதலாக தான் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.