if we fill the petrol for rs 200 then we can get the newspaper free

சலுகை வழங்குவது என்பது எதாவது ஒரு பொருளை வாங்கினால்,அதற்கு சலுகையாக வேறு ஒரு பொருள் வழங்குவது வழக்கம் தான்....

இது போன்ற சலுகைகளை மொபைல் போன் வாங்குவதிலும்,வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதிலும், ஆடைகள் உள்ளிட்ட பல பலவற்றிற்கு பொருத்தமாக இருக்கும் .
இதற்கெல்லாம் தற்போது விதிவிலக்காக சீர்காழியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவத்தின் பெட்ரோல் வங்கியில் வாங்கினால் செய்தித்தாள் இலவசம் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது 

இந்த போஸ்டரில் 2௦௦ ரூபாய்க்கு மேல் பெட்ரோல் டீசல் வாங்கினால், தினமணி செய்தித்தாள் இலவசம் என்றும், அதுவும் முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் தான் இந்த தாள் கிடைக்கும் எனவும் குறிக்கப்பட்டு உள்ளது 

மேலும் தினமும் காலை 6 மணி முதல் ..இந்த சலுகையை வழங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது 

இந்த போஸ்டர் தற்போது மக்களிடேயே கொஞ்சம் ரீச் ஆகி இருக்கு.மேலும் இந்த வசனம் மக்களிடேயே செய்தித்தாளை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்