ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வி.வைத்தியநாதன் தன்னிடம் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 9 லட்சம் பங்குகளை தனது 5 ஊழியர்கள் சொந்தவீடு வாங்க பரிசாக வழங்கியுள்ளார்.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வி.வைத்தியநாதன் தன்னிடம் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 9 லட்சம் பங்குகளை தனது 5 ஊழியர்கள் சொந்தவீடு வாங்க பரிசாக வழங்கியுள்ளார்.

ஐசிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் மேலாண் இயக்குநராக இருக்கும் வி. வைத்தியநாதன்தான்தான் சொந்தமாக வைத்திருக்கும் பங்குகளை தனது ஊழியர்களகு்கு வழங்கியுள்ளது பங்குச்சந்தை பைலிங் மூலம் தெரியவந்துள்ளது

இதுகுறித்து ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஃபைலிங்கில் கூறுகையில் “ வி. வைத்தியநாதன் தன்னிடம் இருந்த 9லட்சம் மதிப்புள்ள வங்கியின் பங்குகளை கீழ்கண்ட 4 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தன்னுடைய பயிற்றுனர் ரமேஷ் ராஜூ(3 லட்சம் பங்குகள்), தன்னுடைய வீட்டு உதவியாளர் பிரஞ்சால் நர்வேக்கர்(2 லட்சம் பங்குகள்), கார் ஓட்டுநர் அழகர்சாமி சி மூப்பனார்(2 லட்சம் பங்குகள்),அலுவலக உதவியாளர் தீபக் பத்தாரே(ஒரு லட்சம் பங்குகள்)வீட்டு வேலை செய்யும் சந்தோஷ் ஜெகதாலே(ஒரு லட்சம் பங்குகள்) ஆகியோருக்கு பங்குகளை வழங்கியுள்ளார்.

இந்தியப் பங்குச்சந்தையில் நேற்றைய மதிப்பின்படி ஐடிஎஃப்சி வங்கியின் ஒரு பங்கு ரூ.43.90 பைசா. 9 லட்சம் பங்குகளின் மதிப்பு ரூ.3.95 கோடியாகும். 

வைத்தியநாதன் முதல்முறையாக இதுபோன்று உதவி செய்யவில்லை. இதற்கு முன் தனது ஊழியர்களுக்கு இதுபோல் வழங்கியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2021,மே மாதம் வைத்தியநாதன் தன்னிடம் இருந்த ரூ.2.43 கோடி மதிப்புள்ள 4.50 லட்சம் பங்குகளை 3 பேருக்கு சொந்த வீடு வாங்க அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

2020, அக்டோபர் மாதம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு லட்சம் பங்குகளை தனது கணித ஆசிரியர் குர்தியால் சைனிக்கு நன்றிக்கடனாக வழங்கினார். 
அதுமட்டுமல்லாமல் ரூ.20 கோடி மதிப்புள்ள4.30 லட்சம் பங்குகளை தனது ஊழியர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு வைத்தியநாதன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐடிஎஃப்சி வங்கியின் இயக்குநராக இருக்கும் வைத்தியநாதனிடம் 2.44 கோடி பங்குகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி 5.68 கோடி பங்குகள் இருந்தன.