தங்க நகை சேமிப்புத் திட்டங்கள் மூலம் மாதத் தவணையில் தங்கத்தைச் சேர்க்கலாம். நகைகளில் சேதாரம், செய்கூலி போன்றவை லாபத்தைக் குறைப்பதால், எளிய டிசைன் நகைகளைத் தேர்ந்தெடுப்பது செய்கூலியைக் குறைக்கும்.

நகை வாங்கும் போது செய்கூலியை குறைக்க இப்படி செய்யுங்கள்?

வருங்கால தேவைகளுக்கும், சேமிப்புக்காகவும் பொதுமக்கள் முதலீட்டையும், சேமிப்பையும் மேற்கொள்வதால் அவர்கள் அதிக ரிஸ்க் உள்ள இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். அப்படியிருக்க, தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என மக்கள் பெரிதும் நம்புகின்றனர். தங்கத்தின் விலையும் உயர்ந்துகொண்ட இருக்க, மக்கள் அதில் முதலீடு செய்யும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எளிய மக்களும் தங்கத்தைச் சேர்க்கும் வகையில், பல்வேறு நகைக்கடைகளில் தங்கம் அல்லது நகை சேமிப்புத் திட்டங்கள் வழக்கில் உள்ளன. மிகவும் வசதியானதாகக் கருதப்படும் இந்த நகை சேமிப்புத் திட்டங்களில் இணைவதன் மூலம், மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து தங்கத்தைச் சேர்க்கலாம். சேமிப்புக் காலம் முடிவடைந்ததும், மாதந்தோறும் நாம் டெபாசிட் செய்த மொத்தத் தொகைக்கு இணையான தங்கத்தை அதே நகைக்கடைக்காரரிடம் இருந்து வாங்கலாம். மேலும், இதற்குச் சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தங்கத்தை பொறுத்த வரை எஸ்டிமேட்டட் ரிட்டர்ன் என்று சொல்லக் கூடிய லாபம் 9 சதவீதம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், தங்கத்தை நகையாக வாங்கும் போது அது 7 சதவீதம் மட்டுமே ரிட்டர்ன் ரேட் கொடுக்கும். ஏனெனில், அதில் ஜி.எஸ்.டி, செய்கூலி மற்றும் சேதாரம் போன்றவை பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் தங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் ரிட்டர்ன் ரேட் 8 சதவீதம் இருக்கும். இதுவே இ.டி.எஃப் முதலீட்டில் 8.9 சதவீதம் லாபம் கிடைக்கும். ஆனால், கோல்டு பாண்டுகளில் வட்டியுடன் சேர்த்து 11.5 சதவீதல் லாபம் கிடைக்கும். நகைகளாக வாங்கும் தங்கத்தை பாதுகாப்பதில் தொடங்கி நிறைய அபாயம் இருக்கிறது.

டிஜிட்டல் தங்கத்தில் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால், இதிலும் ஓரளவிற்கு அபாயம் இருக்கிறது. இ.டி.எஃப்-ஐ செபி கண்காணிக்கின்றனர். இதன் காரணமாக, இ.டி.எஃப் முதலீட்டு முறையில் அபாயம் குறைவாக இருக்கிறது. எனினும், கோல்டு பாண்டுகளை பொறுத்தவரை அரசே இத்திட்டத்தை மேற்கொள்வதால் அபாயம் இல்லை என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் நம்முடைய தேவை அறிந்து தங்கத்தில் முதலீடு செய்யும் போது அதற்கான முழு பலனையும் நாம் பெற முடியும்.

தங்க நகையில், சேதாரம் என்றால் என்ன? கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியாலோ தங்கத்தை உருக்கி நகை செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் வீணாகிறது. இதுதான் சேதாரம். தங்க நகை ஒன்றை வாங்கும்போது, அந்தத் தங்கத்தின் விலையுடன் சேர்த்து அந்த நகையைச் செய்வதற்கான செய்கூலியையும் நுகர்வோர் கொடுக்க வேண்டும். எளிமையான‌ டிசைன் கொண்ட நகைகளின் செய்கூலியைவிட நுணுக்கமான வேலைப்பாடுகளும் வடிவமைப்பும் கொண்ட நகைகளின் செய்கூலி அதிகம். எனவே, எதிர்காலத்துக்கான சேமிப்பு, முதலீடு ஆகிய நோக்கத்தில் தங்க நகைகளை வாங்குபவர்கள் சிம்பிள் டிசைனில் உருவான நகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இதன் மூலம் செய்கூலிக் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.

விலை பற்றி உங்களுக்கு கவலையில்லை என்றாலோ, நீங்கள் முதலீட்டுக்காக வாங்காமல் அணிவதற்காக மட்டுமே வாங்கினாலோ அதிகம் வேலைப்பாடுகள் நிறைந்த நகையை வாங்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கலாம். இப்படி, தேவைக்கு ஏற்ப நகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் பயன் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.

கேரளா மாடல் நகைகளில் வேலைப்பாடுகள் அதிகம் இருக்காது, அதை உருவாக்கும்போது சேதாரம் அதிகம் இருக்காது என்பதால், அதற்கான செய்கூலியும், சேதாரமும் குறைவாக இருக்கும். அதுவே, பெங்கால் மாடல், ஆன்டிக் மாடல் நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருக்கும். எனவே, அதற்கான செய்கூலி, சேதாரம் அதிகமாக இருக்கும். இது போன்ற நகை மாடல்களை தேர்ந்தெடுக்காமல் இருந்தால் நகை வாங்கும் போது குறிப்பிட்ட அளவில் சேமிக்கலாம்.

உலகின் மிகப்பெரிய தங்க இருப்புக்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இது தோராயமாக 8,133.5 மெட்ரிக் டன்களைக் குவித்துள்ளது. இந்தத் தங்கத்தின் பெரும்பகுதி கென்டக்கியில் உள்ள புகழ்பெற்ற ஃபோர்ட் நாக்ஸில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளது. இது தேசியப் பாதுகாப்புக்கு இணையாகக் கருதப்படும் ஒரு வசதியாகும். கொலராடோவில் உள்ள டென்வர் மின்ட் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மின்ட் ஆகியவற்றில் கூடுதல் இருப்புக்கள் உள்ளன. உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) அறிக்கைகளின்படி, இந்த இருப்புக்கள் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கும், உலகின் முதன்மை இருப்பு நாணயமாக அமெரிக்க டாலரின் நிலையை ஆதரிப்பதற்கும் மிகவும் முக்கியம். உலகளவில் இரண்டாவது பெரிய தங்க இருப்புக்களை ஜெர்மனி கொண்டுள்ளது, தோராயமாக 3,351.5 மெட்ரிக் டன்கள்.